Monday, October 5, 2015

நிழல்களின் நாயகன்! -சதீஷ் நவீன்

அந்த ஃபேஸ்புக் படம்

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளில், சுவரில் தெரியும் நிழல் விநாயகர் படம்தான் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக இருந்தது (பார்க்க: படம்). அந்த விநாயகர் படத்துக்கு அருகில் அமர்ந்திருந்தவ‌ர் அனில்குமார். அவர் யார் என்று ஃபேஸ்புக்கில் தேடிப் பிடித்துத் தொடர்புகொண்டோம். மற்றதை அவரே சொல்கிறார்...

“என் சொந்த ஊர் தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள எல்லந்தகுன்டா கிராமம். 8 வயதாக இருக்கும்போதிலிருந்து நான் ஓவியங்கள் வரைந்துவருகிறேன். ஆரம்பத்தில் என் அப்பா ராமுலு பல நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார்.

எங்கள் ஊர் சின்ன கிராமம் ஆதலால், இங்கே பல நேரம் மின்சாரம் இருக்காது. மின்சாரம் இல்லாத நேரங்களில் விளக்குகள் ஏற்றி வைத்து சமாளிப்போம். அப்படி ஒரு நாள் என் வீட்டில் விளக்கேற்றப்பட்டிருந்தது. அப்போது அருகில் இருந்த பொருட்களின் பிம்பம் சுவரில் பட்டு, விநோதமான உருவங்களாகத் தெரிந்தன.

இதனைப் பார்த்ததும் ‘நாம் ஏன் நிழல் ஓவியங்கள் படைக்கக் கூடாது?' என்ற யோசனை எனக்குள் தோன்றியது. சோப் டப்பா, டூத் பிரஷ், கண்ணாடி, பேனா ஸ்டாண்ட் என கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு அந்த யோசனையைச் செயல்படுத்திப் பார்த்தபோது கிடைத்ததுதான் இந்த நிழல் விநாயகர்.

நான் எம்.எஸ்சி. வேதியியல் படித்திருக்கிறேன். அரசு வேலைக்காகக் காத்திருக்கிறேன். தற்சமயம் எனது பணி, பொழுதுபோக்கு எல்லாமே ஓவியம்தான்!" என்கிறார் அனில் குமார்.
நிழல் ஓவியங்கள் மட்டுமல்லாது, பென்சில் ஷேட் ஓவியங்கள், பென்சில் முனையில் சிற்பங்கள் செய்வது, சாக்பீஸ் சிற்பங்கள், காரில் படிந்திருக்கும் தூசியில் ஓவியம் வரைவது, குப்பைகளைக் கொண்டு ஓவியம் செய்வது எனப் பல வகைகளில் தனது கைவண்ணத்தைக் காட்டுகிறார் அனில்!
இவர் தனது ஓவியங்களை ஃபேஸ்புக்கில் ‘Sana's Innovision’ என்ற பக்கத்தில் பதிவிட்டுள் ளார். அவற்றைக் காண இங்கே சொடுக்கவும்:


நன்றி ; தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.