Friday, October 16, 2015

நேதாஜி ரகசிய ஆவணங்கள் அடுத்த ஆண்டு வெளியிடப்படும்:!


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்புடைய ரகசிய ஆவணங்கள் வரும் ஜனவரி 23-ம் தேதி முதல் வெளியிடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

நேதாஜியின் குடும்பத்தைச் சேர்ந்த 35 பேர், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தனர். இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. அப்போது, ஆவணங்களை வெளியிடுவது தொடர்பான பணியில் உள்துறை அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது என நேதாஜியின் குடும்பத்தினரிடம் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்புக்குப் பிறகு, வரும் ஜனவரி 23-ம் தேதி, நேதாஜியின் 118-வது பிறந்த நாளிலிருந்து அவர் குறித்த ரகசிய ஆவணங்கள் வெளியிடப்படும் என ட்விட்டரில் மோடி பதிவிட்டுள்ளார்.
“வெளிநாடுகளில் உள்ள நேதாஜி குறித்த ரகசிய ஆவணங் களை வெளியிடும்படியும் அந்நாடுகளை இந்தியா கேட்டுக் கொள்ளும். வரும் டிசம்பரில் ரஷ்யாவிடமிருந்து இக்கோரிக்கை தொடங்கும்” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

“வரலாற்றின் குரல்வளையை நெரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களின் வரலாற்றை மறக்கும் நாட்டுக்கு அதனை உருவாக்கும் சக்தி இருக்காது” எனவும் அவர் குறிப்பிட்டுள் ளார்.
இதுதொடர்பாக மோடி மேலும் கூறும்போது, “தயவு செய்து உங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை கருதுங்கள் என்று அவர்களிடம் கூறினேன். முக்கியத்துவம்வாய்ந்த ஆலோச னைகளை அவர்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டனர். விரிவான, குறிப்பிடத்தகுந்த உரை யாடலை நாங்கள் மேற்கொண் டோம்” என தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள நேதாஜி தொடர்பான ஆவணங்களையும் கேட்டுப்பெறுமாறு நேதாஜி குடும்பத்தினர் வைத்த கோரிக் கையை மோடி ஏற்றுக் கொண்டார். அந்நாடுகளுக்கு கடிதம் எழுதுவது மட்டுமின்றி, அந்நாட்டின் தலைவர்களை சந்திக்கும்போது இதுதொடர்பாக பேசுவேன் என பிரதமர் தெரிவித் தார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி :-தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.