Tuesday, October 13, 2015

298 உயிர்களை பறித்த மலேசிய எம்.ஹெச்.17 விமானம் வெடித்துச் சிதறியது எப்படி?:


298 உயிர்களை பறித்த மலேசிய எம்.ஹெச்.17 விமானம் வெடித்துச் சிதறியது எப்படி?: இன்று இறுதி அறிக்கை தாக்கல்

நெதர்லாந்தில் இருந்து கோலாலம்பூர் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 எப்படி வெடித்துச் சிதறியது என்பது குறித்த டச்சு நாட்டு நிபுணர்களின் விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17-ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு 298 பேருடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 கிளம்பியது. 

உக்ரைன் நாட்டுக்குட்பட்ட வான்வெளியில் சென்றபோது ’பக்’ ரக ஏவுகணை தாக்குதலில் அந்த விமானம் வெடித்துச் சிதறியது. அதில் இருந்தவர்கள் அனைவரும் உடல் சிதறி பலியாகினர். அந்த விமானத்தை உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப்படை தாக்கியதாக உக்ரைன் அரசு தெரிவித்தது. 

ஆனால், உக்ரைன் ராணுவம் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்தது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நெதர்லாந்து தலைமையில் டச்சு விமானப் பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் இறுதி அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது. 

தெற்கு நெதர்லாந்தில் உள்ள ஜில்சே-ரிஜன் விமானப்படை தளத்தில் வெளியிடப்பட உள்ள அந்த அறிக்கையில் விமானம் எப்படி வெடித்துச் சிதறியது? என்பது பற்றி தெரிவிக்கப்படலாம். அதற்கு யார் காரணம்? என்பது தெரியாது என்று கூறப்படுகிறது. 

நன்றி :- மாலைமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.