Flash news:

  • உலகம்
  • தமிழகச்செய்திகள்
  • கட்டுரைகள்
  • சிறப்பு செய்திகள்
  • அனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.

Wednesday, April 8, 2015

ஐ.ஏ.என்.எஸ். - இவ்வாறு தலைப்பிட்டுச் செய்தியை வெளியிடலாமா ?

ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குத் துரிதமாகப் பணம் அனுப்பிட அஞ்சல் துறை உதவுகின்றது.

தலைமை அஞ்சலலுவலமாக இருப்பின் அனுப்பிய அன்றே பணம் கிடைத்துவிடும்.

பிற ஊர்களுக்கு மறுநாள் நிச்சயம் கிடைக்கும். 

மொபைலில்கூட பணம் அனுப்பிட வசதி உள்ளது. உடனே வாங்கிக் கொள்ளலாம், அஞ்சலகம் சென்று, உரிய அடையாள ஆவணத்த்தைக் காட்டினால் !

பல்வேறு பிரிவுகளில் தவல்களும் அனுப்பிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவற்ரிற்கான எண்ணைக் குறிப்பிட்டாலே போதுமானது.

நவீன வசதிகளின் காரணமாக, நம் கையெழுத்தில் எழுதப்பட்ட மணியாடர் பாரம் அனுப்புவோருக்குச் சேர்ப்பிக்கப்படவில்லை; அவ்வளவுதான் !

விறகடுப்பிலிருந்து மண்ணெண்ய் அடுப்பிற்கு மாறியது சமூகம்.

மண்ணெண்ணெயிலிருந்து எரிவாய்விற்கு மாறினோம்.

பாரம்பரியப் பயன்பாட்டுமுறை முடிவிற்கு வந்தது என்று புலம்பவா செகின்றோம்.?

ஏதோ அஞ்சல்துறை மக்களுக்கு அநீதி இழைத்துவிட்டது போன்றதொரு மாயத்தை உருவாக்கிடச் செய்யும் இந்தத் தலைப்பு தேவைதானா?


சமூக ஆர்வலர்கள் ஐ.ஏ.என்.எஸ் க்குக் கண்டனம் தெரிவிக்கலாமே !

அரசியல் கட்சிகளும் அறிக்கைககள் விடலாமே !

இந்தத் தலைப்பினைப் பயன்படுத்துவது யாரைத் திருப்திப்படுத்திட? 

சத்தமில்லாமல் முடிவுக்கு வந்தது 'மணி ஆர்டர்' சேவை



கோப்புப் படம்.
கோப்புப் படம்.
அஞ்சல் துறையில் இருந்து எவ்வாறு தந்தி அனுப்பும் முறை முடிவுக்கு வந்ததோ அதேபோல மரபார்ந்த `மணி ஆர்டர்' சேவையும் சத்தமில்லாமல் இந்த ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இருந்து முடிவுக்கு வந்துள்ளது. தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பெருகி வரும் இந்தக் காலத்தில், அதற்கு ஏற்றாற்போல் அரசின் பல்வேறு துறைகளிலும் நவீன மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

அவ்வாறே கடந்த 2008ம் ஆண்டு அஞ்சல் துறையில் பணப் பரிமாற்ற சேவையைத் துரிதப்படுத்த `எலக்ட்ரானிக் மணி ஆர்டர்' (இ.எம்.ஓ.) சேவை மற்றும் `இன்ஸ்டன்ட் மணி ஆர்டர்' (ஐ.எம்.ஓ.) சேவை ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இ.எம்.ஓ. மூலமாக ரூ.1 முதல் ரூ.5,000 வரையிலான தொகையை மணி ஆர்டர் செய்தால் ஒரே நாளில் பணப் பரிமாற்றம் நிகழ்ந்து விடும். அதேபோல ஐ.எம்.ஓ. மூலமாக ரூ.1,000 முதல் ரூ.50,000 வரையிலான தொகையை மணி ஆர்டர் செய்தால் உடனடியாக இணையம் மூலமாக பணப் பரிமாற்றம் நிகழ்ந்துவிடும்.

இதுகுறித்து இந்தியா போஸ்ட்டின் துணை இயக்குநர் (நிதி) ஷிகா மதூர் குமார் கூறும்போது, "மரபார்ந்த மணி ஆர்டர் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்குப் பதிலாக, தற்போதுள்ள இ.எம்.ஓ. மற்றும் ஐ.எம்.ஓ. சேவைகள் விரைவாகவும் சுலபமாகவும் பணப் பரிமாற்றம் செய்வதற்கு உதவுகிறது" என்றார்.

இதன் மூலம் சுமார் 135 ஆண்டு கால மணி  ஆர்டர் சேவையின் பாரம்பரியம் முடிவுக்கு வந்துள்ளது.

நன்றி :- தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.