Monday, September 29, 2014

கோவையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்: 15 பேர் மொட்டை போட்டனர்



ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் அருகே இன்று காலை அ.தி.மு.க.வினர் உண்ணா விரதத்தை தொடங்கினர்.
கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கோவை மாநகராட்சி மேயருமான கணபதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதம் குறித்து மேயர் கணபதி ராஜ்குமார் கூறும் போது தமிழக முதல்வராக இருந்த அம்மா அவர்கள் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு தமிழகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. அரசியலில் அம்மாவுடன் நேரடியாக மோத முடியாதவர்கள் சதி செய்துள்ளனர்.
இந்த வழக்கில் அம்மா வெற்றிபெற்று மீண்டும் தமிழக முதல்வராவது உறுதி என்றார்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்களில் 15–க்கும் மேற்பட்டோர் வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாக வேண்டி மொட்டை போட்டனர்.

உண்ணாவிரதத்தில் முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி, துணை மேயர் லீலாவதி உன்னி, மண்டல தலைவர்கள் உள்பட அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி : மாலைமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.