பீகாரில் அரசு உத்தரவின்படி, 21 மாவோயிஸ்டுகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து டிஜிபி அபயானந்த் கூறியதாவது: பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மாவோயிஸ்டுகளின் சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக 39 வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமைகம் முடிவு செய்தது.
அதன்படி, முதற்கட்டமாக நக்ஸல் பாதிப்பு அதிகமுள்ள ஒüரங்காபாத் மாவட்டத்தில் 21 மாவோயிஸ்டுகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றில், மாவோயிஸ்ட் கமாண்டரான அரவிந்த் ஜீயின் மனைவிக்குச் சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிலமும் அடங்கும்.
மாவோயிஸ்டுகளின் நிலம், வாகனங்கள், பணம், வங்கி வைப்புத்தொகை மற்றும் லேப் டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
உள்துறைச் செயலாளர் அனுப்பிய அறிவிக்கையைத் தொடர்ந்து அரசு ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டிஜிபி அபயானந்த் தெரிவித்தார்.
தினமணி ,
0 comments:
Post a Comment
Kindly post a comment.