WARREN BUFFETT HOUSE
உலகில் வெற்றி பெற்ற பங்குச்சந்தை
முதலீட்டாளர்களில் வாரேன் பப்பேட்டும் ஒருவர். இவரது சொத்தின் மொத்த
மதிப்பு இந்திய ரூபாய்க் கணக்கில் சொல்லப்போனால் 2,48,000 கோடி. 55
ஆண்டுகளுக்கு முன் வாங்கிக் குடியேறிய வீட்டிலேயே இன்றளவும் வசித்து
வருகின்றார். வசதிகள் வந்துவிட்டனவே என்று வீட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
மேற்கண்ட பத்தியை எழுதிடக் காரணம், ஆங்கிலச் சஞ்சிகைகளிலோ அல்லது அதைப்பார்த்து சிறு செய்தியாககவோ கட்டுரையாகவோ எழுதப்பட்டனவற்றைப் படித்தோக்குத் தமிழகத்திலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகத்தான்.
சரி , மீண்டும் வாரேன் பப்பேட்டைச் சந்திப்போமா? இன்றைய THE ECONOMIC TIMES WEALTH சிறப்புப் பகுதியில்தான் அந்தக் கோடீஸ்வரைப்ப்றிய தகவல் கிடைத்தது. பின்னர் இணையத்துள் சென்றால் அவரைப்பற்றி ஏராளமான தகவல்கள் கிடைத்தன. அனைத்தையும் பதிவிடப்போனால் கட்டுரையாகிவிடும். எனவே, இரண்டே இரண்டு செய்திகளை மட்டும் இங்கே வலைப்பூ அன்பர்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.
தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவித்தால் ,விரைவில் நமக்குத் தேவையான பொருட்களை விற்றுத்தான் வாழ வேண்டும் என்ற நிலைமைக்குக் கூடத் தள்ளப்படுவோம். தேவை என்பது வேறு ; ஆசை என்பது வேறு ; தேவைகளைப் பட்டியலிட்டு வரிசைப்படியும், வசதிப்படியும் வாங்கிக்கொண்டே போகலாம். ஆசைபபடுவனவற்றைறை எல்லாம் வாங்கத் துவங்கினால் வீழ்ச்சி நிச்சயம் இது அவரது வெற்றிக்குப் பின் இருக்கக்கூடிய ஒரு ரகசியம்.
நல்ல நடைமுறை :- வருமானம் – சேமிப்பு = செலவுகள்
மோசமான நடைமுறை :- வருமானம் – செலவினங்கள் = சேமிப்பு
இது அவருடைய வெற்றிக்குப்பின் இருக்கக்கூடிய இன்னொரு இரகசியம்.
மாதக் கடைசியிலும், வாழ்வின் இறுதியிலும் இன்னலின்றி வாழ்ந்திட இவைகள் நல்லநடைமுறைகள்தானே ?/.
அவரது வெற்றிக்குக் காரணமான பல்வேறு தகவலகள் இணையத்திலேயே பரவலாக உள்ளன.. பார்க்கலாம். படிக்கலாம். நடைமுறைக்கும் கொண்டுவரலாம். வாழக்கை இனிதாயிருக்கும்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.