Tuesday, October 15, 2013

"சூரிய மின்​சக்தி:​ சமை​யல் எரி​வாயு பயன்​பாட்டை மிச்​சப்​ப​டுத்​த​லாம்'


     மயி​லாப்​பூர் ஸ்ரீ ராம​கி​ருஷ்ணா மிஷன் 
     மாண​வர் இல்​லத்​தில் நிறு​வப்​பட்ட 
                                             "அருண் 100' சூரிய மின்​சக்தி அமைப்பு.​

சூரிய மின்​சக்தி அமைப்பை நிறு​வு​வ​தன் மூலம் சமை​யல் எரி​வா​யுவை மிச்​சப்​ப​டுத்த முடி​யும் என ஸ்ரீ ராம​கி​ருஷ்ணா மடத்​தின் தலை​வர் கௌ​த​மா​னந்​தர் கூறி​னார்.​

மயி​லாப்​பூர் ஸ்ரீ ராம​கி​ருஷ்ணா மிஷன் மாண​வர் இல்​லத்​தில் திங்​கள் கிழமை நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் இல்​லத்​தின் மேல்​த​ளத்​தில் புதி​ய​தாக நிறு​வப்​பட்ட "அருண் 100' எனப்​ப​டும் சூரி​ய​சக்தி அமைப்​பின் செயல்​பா​டு​கள் குறித்​தும்,​​ நீராவி மூலம் சமை​யல் தயா​ரிப்​பது குறித்​தும் மும்பை க்ளிக் சோலார் நிறு​வ​னத்​தின் தொழில்​நுட்ப வல்​லு​நர்​கள் மாண​வர்​க​ளுக்கு விளக்​கம் அளித்​த​னர்.​

இது​கு​றித்து ராம​கி​ருஷ்ணா மடத்​தின் தலை​வர் கௌ​த​மா​னந்​தர் கூறி​யது:​ "அருண் என்​றால் சூரி​யோ​த​யம்' என்று அர்த்​தம்.​ சுற்​றுச்​சூ​ழல் மாசு​பாட்டை தடுக்​க​வும்,​​ எரி​பொ​ருள் சிக்​க​னம் கரு​தி​யும் அருண் 100 சூரி​ய​சக்தி அமைப்பு நிறு​வப்​பட்​டுள்​ளது.​ காலை முதல் மாலை வரை சூரிய ஒளிக்​கீற்​றுக்​களை எந்த திசை​யில் இருந்​தும் 99.5 சத​வீ​தம் கிர​கித்​துக்​கொள்​ளும் வகை​யில் நிறு​வப்​பட்​டுள்​ளது.​ இந்த அமைப்​பின் மூலம் 600 கிலோ நீரா​வியை தின​மும் உற்​பத்தி செய்து 3 ஆயி​ரத்து 500 முதல் 4000 மாண​வர்​க​ளுக்கு தேவை​யான சாம்​பார்,​​ சாதம்,​​ பருப்பு ஆகி​ய​வற்றை தயார் செய்ய முடி​யும்.​ ​ ​

சூரி​ய​மின்​சக்தி அமைப்பை நிறு​வு​வ​தன் மூலம் எரி​வாயு பயன்​பாட்டை மிச்​சப்​ப​டுத்த முடி​யும்.​ மேலும் தின​மும் 2 கேஸ் சிலிண்​டர்​க​ளின் தேவையை குறைக்​கி​றது.​ இது​போன்ற சூரி​ய​சக்தி அமைப்​புக்கு ரூ.33 லட்​சம் செல​வா​கும்.​ அதில் 30 சத​வீ​தத்தை மத்​திய அரசு மானி​ய​மாக வழங்​கும்.​ சூரிய மின்​சக்தி அமைப்​புக்கு மிகக் குறைந்த அள​வி​லான மின்​சா​ரம் மட்​டுமே தேவைப்​ப​டு​கி​றது.​ என்​றார் கௌ​த​மா​னந்​தர்.​

நிகழ்ச்​சி​யில் மாண​வர் இல்​லத்​தின் செய​லர் ஸ்வாமி சத்​யா​னந்​தாஜி உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​          

தினமணி-15-10-2013                                                                                        


0 comments:

Post a Comment

Kindly post a comment.