Friday, October 18, 2013

பிராமண எதிர்ப்புத் தோன்றியது எப்போது? ஒரு வரலாற்றுப் பார்வை

Inbox
x

மிஞ்ஞானி
10:48 (7 hours ago)

to mintamil, vallamai
Boxbe This message is eligible for Automatic Cleanup! (radius.consultancy@gmail.com) Add cleanup rule | More info

                                                                              தன்னை ஒரு பிராமணராக மாற்றிக்கொண்ட வீரமாமுனிவர்

பிள்ளைகளைப்பிடித்து மதமாற்றம் செய்த ஃப்ரன்சிஸ் பாதிரியார்


தென்னகத்தில் மட்டும் பிராமண எதிர்ப்புத் தோன்றியதாகவும் அதில் முதன்மை பெறுவோர் திராவிட இயக்கத்தினர் என்ற கருதுகோள் சரியா என்ற 
கேள்விக்கான விடை சரியல்ல என்பதே

முதல் பிராமண எதிர்ப்புத் தோன்றிய இடம் கேரளாவாகும்.  கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கேரளாவை அடைந்த சிரியன் கிறித்துவர்கள் மதமாற்றம் செய்ய முயற்சித்துத் தோல்வி அடைந்தததற்குக் காரணம் பிராமணர்கள் என்று அவர்கள் கருதினர்.  பல பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பிரிவினை ஏற்ற தாழ்வு என்ற சமுக நீதிக்கெதிரான கருத்துக்களைப் பரப்பிய பிராமணர்களின் மீது மக்கள் வைத்திருந்த மதிப்பு காரணமாக அவர்கள் மதம் மாறத் தயங்கியதால் கேரளாவில் கிறித்துவ மததத்தைப் பரப்பத் தடையாக இருந்த பிராமணர்களை எதிர்த்தனர்

சாதிப்பிரிவுகளை எதிர்த்த ஆரிய சமாஜ் இயக்கம் பிராமணர்களை எதிர்த்தது.  சாதிப்பிரிவுகள் பாகுபாடு ஏற்றத்தாழ்வு வேதக் கொள்கைக்கு முரணானது என்று பிராமண எதிர்ப்பைத் தொடங்கினர்

தமிழகத்தில் மதுரை மிஷனைச் சேர்ந்த பாதிரிகளும் மத மாற்றத்துக்குத் தடைக்கல்லாக இருப்பவர்கள் பிராமணர்கள் என்பதை உணர்ந்து வீரமாமுனிவர் உட்பட அந்த மிஷனரிகள் புதிய உத்தியைக் கடைப்பிடித்தனர்.  வீரமா முனிவர் வேத இயக்க அடிப்படையில் அவர்களுக்கென ஒரு ஆஸ்ரமம் அமைத்தனர்.  தன்னுடைய பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டு அந்தணர்போல் உடையணிந்து புலால் உண்ணாமல் ஒரு வேதியர்போல் வாழ்ந்து மக்களைத் திசைதிருப்பி மதமாற்றம் செய்ய முயன்றனர்

அவருடைய தோலின் நிறம் பற்றிய ஐயத்துக்கிடையில் ரோமாபுரியில் படைக்கப்பட்ட ரிக்வேதம் ஒன்றையும் வெளியிட்டுக் கொஞ்சகாலம் பிராமணர்களையே மதமாற்றம் செய்தனர்.  இது  நீண்டநாள் நிலக்கவில்லை உண்மை தெரிந்ததும் மக்கள் மதமாற்றத்தில் அக்கறை காட்டவில்லை.  மதம் மாறியவர்களும் சாதி இல்லாத கிறித்துவத்தில் தங்கள் சாதியப் பெயர்களையும் (மதிவாணன் செட்டியார், சவரிமுத்துக் கவுண்டர்) பழக்கங்களையும் பின்பற்றுவதைத் தடுக்கவில்லை

எவ்வளவோ சமூக நீதிக்கு எதிரான செயல்களைச் செய்தவர்கள்மீது மக்களுக்கு இவ்வளவு பிடிப்பு ஏன் என்று பலர் சிந்தித்தனர்.  பிராமணர்கள் கண்டுபிடித்த சாதிப்பிரிவு எவ்வளவுதான் கீழமை நிலையில் வைத்து நடத்தினாலும் தமிழர்கள் சாதிப்பிரிவு என்ற அடையாளமும் கைகோர்த்து நிர்க ஒரு குழுவும் இருந்தது என்ற மனநிறைவு இருப்பதை உணர்ந்தனர்.  மதம் மாறியவர்கள் இந்த பலத்தையும்ம் பாதுகாப்பையும் இழந்ததாக உணர்ந்து மீண்டும் தங்கள் மதத்திற்கே திரும்பினர் என்று ஒரு சமூகவியல் பார்வை கருதுகிறது

மீண்டும் மீண்டும்  தாக்குதலுக்கு உள்ளான பிராமணர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் தாக்குப் பிடிப்பதற்கு அடிப்படையே அவர்கள் கண்டுபிடித்த வர்ணாஸ்ரம தர்மமும் சாதிப் பிரிவுகளுமே என்ற கருத்து வியப்பை அளிக்கிரது

சாதிப்பிரிவுகள் இருக்கும்வரை தமிழகத்தில் பிராமணர்களும் இருப்பார்களோ

பாப்பம்

வம்பாண்டி

0 comments:

Post a Comment

Kindly post a comment.