Sunday, October 27, 2013

மனித உரிமைகள் மீறப்பட்டது உண்மை! ஒப்புக்கொண்டது இலங்கை அரசு

http://news.lankasri.com/show-RUmrzARbMYfoy.html


[ ஞாயிற்றுக்கிழமை, 27 ஒக்ரோபர் 2013, 04:04.07 AM GMT ]



உலகில் உள்ள எல்லா நாடுகளையும் போலவே இலங்கையிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனாலும் அதனைs சரி செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையில் நடத்தப்பட வேண்டுமென ஏற்கனவே உலகின் அனைத்து நாடுகளுமே ஏகமனதாக தீர்மானித்திருந்தன.

அதன் காரணத்தினால் சர்வதேச நாடுகள் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்க வாய்ப்பில்லை.

இருப்பினும் அமர்வுகளில் பங்கேற்க தவறும் நாடுகள் எதிர்காலத்தில் தனிமைப்படுத்தப்படக் கூடும்.

அதற்கமைய இந்திய பிரதமர் மன்மோகன் இந்தியாவிற்கு மட்டும் தலைவர் அல்ல எனவும், ஆசியாவிற்கும் தலைவர்.  அவர் இதனை நினைவில் நிறுத்திக் கொண்டு இந்திய தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதா இல்லையா என்பதனை இன்னமும் பிரதமர் மன்மோகன் சிங் தீர்மானிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.