Tuesday, October 15, 2013

தபால் நிலையங்கள் மூடல் : சிறு சேமிப்புக்கணக்கு வைத்திருப்போர் அவதி !




திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் பல தபால் நிலை​யங்​கள் தற்​போது மூடப்​பட்டு வரு​வ​தால்,​​ சிறு​சே​மிப்​பில் கணக்கு வைத்​தி​ருக்​கும் முதி​யோர்,​​ பெண்​கள் அவ​திக்​குள்​ளாகி வரு​கின்​ற​னர்.​

தி​ரு​வள்​ளூர் மாவட்ட தலைமை தபால் நிலை​யத்​தின் கட்​டுப்​பாட்​டின் கீழ் திரு​நின்​ற​வூர்,​​ திரு​வள்​ளூர்,​​ திருத்​தணி,​​ பேரம்​பாக்​கம்,​​ திரு​வா​லங்​காடு,​​ ஆர்.கே.பேட்டை,​​ பள்​ளிப்​பட்டு ஆகிய பகு​தி​க​ளில் 30-க்கும் மேற்​பட்ட கிளைத் தபால் நிலை​யங்​க​ளும்,​​ 12-க்கும் மேற்​பட்ட துணைத் தபால் நிலை​யங்​க​ளும் இயங்கி வந்​தன.​

இந்த தபால் நிலை​யங்​க​ளில் கிரா​மம் மற்​றும் நகர்​பு​றங்​க​ளில் உள்ள முதி​ய​வர்​கள்,​​ பெண்​கள்,​​ ஆத​ர​வற்​றோர் ஆகி​யோர் சிறு சேமிப்​புக் கணக்​கு​களை வைத்​தி​ருந்​த​னர்.​

அ​வர்​கள் தங்​க​ளுக்கு அன்​றா​டம் கிடைக்​கப்​பெ​றும் பணத்​தில் சிறு தொகையை தபால் நிலை​யங்​க​ளில் சேமிப்​பாக போட்டு வரு​கின்​ற​னர்.​வங்​கி​யைக் காட்​டி​லும்,​​ தபால் நிலை​யங்​க​ளில் பணப் பரி​மாற்​றம் செய்​வ​தில் சிர​மம் குறை​வாக இருப்​ப​தா​லும்,​​ கணக்​கில் இருக்​கும் குறைந்​தத் தொகை​யை​யும் வேண்​டிய நேரத்​தில் எடுத்​துக் கொள்​ள​வும் வசதி இருப்​ப​தா​லும் கிரா​மத்​தி​னர் பெரும்​பா​லும் தபால் நிலை​யங்​களை நாடி வரு​கின்​ற​னர்.​ ​

தபால் நிலை​யங்​கள் மூடல்...​

இந்​நி​லை​யில் கடந்த சில ஆண்​டு​க​ளாக திரு​நின்​ற​வூர்,​​ திரு​வள்​ளூர்,​​ திருத்​தணி போன்ற பகு​தி​க​ளில் உள்ள தபால் நிலை​யங்​கள் மூடப்​பட்டு வரு​கின்​றன.​ ​அவ்​வாறு மூடப்​ப​டும் தபால் நிலை​யங்​க​ளின் கணக்​கு​கள்,​​ வேறு பகு​தி​யில் உள்ள தபால் நிலை​யங்​க​ளுக்கு மாற்​றப்​ப​டு​கின்​றன.​

உ​தா​ர​ண​மாக திரு​வள்​ளூ​ரில் பஜார் வீதி,​​ நேதாஜி சாலை உள்​ளிட்ட பகு​தி​க​ளில் உள்ள தபால் நிலை​யங்​கள் மூடப்​பட்டு,​​ அதன் கணக்​கு​கள் அங்​கி​ருந்து 3 கிலோ​மீட்​டர் தொலை​வில் உள்ள தலைமை தபால் நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது.​ ​

மக்​கள் அவதி​

இதன் கார​ண​மாக,​​ இப்​ப​கு​தி​க​ளில் உள்ள முதி​யோர்,​​ பெண்​கள் ஆகி​யோர் பஸ் அல்​லது ஆட்​டோக்​க​ளில் தலைமை தபால் நிலை​யத்​துக்​குச் சென்று ரூ.50,​ ரூ.100-ஐ கட்டி வரு​கின்​ற​னர்.​

சி​றிய தொகை​யைக் கட்​டு​வ​தற்கு பணம் செலவு செய்து,​​ நீண்​ட​தூ​ரம் சென்று வர வேண்​டி​யுள்​ள​தால் அவர்​கள் கடு​மை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ள​னர்.​இ​த​னால் பலர் தங்​க​ளது கணக்​கு​களை முடித்து வரு​கின்​ற​னர்.​

இது குறித்து தலைமை தபால் நிலைய அலு​வ​லர் கூறி​யது:​

ந​க​ராட்சி,​​ பேரூ​ராட்சி போன்ற பகு​தி​க​ளில் ஒரே ஒரு துணைத் தபால் நிலை​யம் மட்​டுமே இருக்க வேண்​டும்.​ ​

அந்தக் காலத்​தில் ஒரே பகு​தி​யில் தொடங்​கப்​பட்ட பல துணைத் தபால் நிலை​யங்​கள் தற்​போது மூடப்​பட்டு வரு​கின்​றன.​ ​

இ​து​வரை 6 துணைத் தபால் நிலை​யங்​கள் மூடப்​பட்​டுள்​ளன என்​றார் அவர்.​       

தினமணி -15-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.