Saturday, October 19, 2013

கனடா பாராளுமன்றத்தில் தமிழில் பேசிய முதல் பா.உ. ஈழத்துப் பெண்மணி !

இந்தியப் பாராளுமன்றத்தில் தமிழ் ஒலித்திருஇக்கின்றதா ? யாம் அறியோம் பராபரமே. ஆனால் ஈழத்தில் 1981-ஆம் ஆண்டு பிறந்து, 6 வயதிலேயே கனடாவிற்குக் குடிபெயர்ந்த சிறுமி, இன்று கனடா பாராளுமன்றத்தில் தமிழில் பேசியிருக்கின்றார் என்றால் நம்ப முடிகின்றதா ?

பாவையர் மலர் அக்டோபர் 2013- மாத இதழில் படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கும்போது நம்பாமலா இருக்க முடியும் ?

கனடா நாட்டின் பாராளுமன்றத்தில் வெள்ளையர் அல்லாத முதல் உறுப்பினர். மிக இளைய வயதில் இந்தப் பொறுப்பை அடைந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்குழுவின் பொதுக் காரியதரிசி. இக்குழுவின் முதல் பெண் உறுப்பினர். இந்தியா மற்றும் இலங்க்கை அல்லாத நாடுகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட இரண்டாவது பெண்.

" கனடிய பாராளுமன்றத்தின் முதல் தமிழ் உறுப்பினர் என்ற வகையிலே, இந்த மதிப்பிற்குரிய அவையிலே எனது தாய்மொழியாம் தமிழ் மொழியில் பேச முடிவதை நினைத்து ஒருங்க்கே பெருமையாகவும் எளிமையாகவும் உணர்கின்றேன். தமிழர்களாகிய நாம் பெரும்பாலும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் போர்ச் சூழலிருந்தும் தப்பித்தே கனடாவிற்கு வந்திருக்கிறோம்.

கனடா எங்களை இருகரங்கொண்டு அரவணைத்தது. நாமும் இந்தப் பெருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளத்திற்கும் முனைப்போடு பங்களித்து வருகிறோம். இன்று இந்த அவையிலே தமிழ் பெசப்பட்டதை, இந்த மைல்கல் எம்மால் எட்டப்பட்டதை அறிந்து உலகெங்கிலும் புலம் பெயர் தமிழர்கள்நிச்சயமாகப் பெருமையடைவார்கள்.

கனடாவில் எமது சமூகத்தின் வளர்ச்சியின் அடுத்தபடி இது தமிழர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் தடைகள் தகரும். அவர்கள் கனடாவின் உயர் தலைமைப் பொறுப்புக்களை நோக்கி முன்னேறுவார்கள்."

இவ்வாறு ரத்திகா சிற்சபைஈசன் பேசி முடித்தபின் அப்பாராளுமன்றத்திலே விண்ணை எட்டும் கரகோஷம் ஒலித்தது. அழுத்தந்திருத்தமாகப் பேசும் அவர் உச்சரிப்பைப் பார்க்கும்பொழுது நாம் பேசுவது தமிழ்தானா என்ற ஐயப்பாடு எழாமல் இல்லை. யூட்யூப்பில் இவரது அழகிய சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழலாம். 

தகவல் உதவி :-

பாவையர் மலர் 

மாத இதழ்,

 ஆசிரியர்.ம.வான்மதி

PAVAIMATHI@YAHOO.COM


0 comments:

Post a Comment

Kindly post a comment.