Thursday, October 10, 2013

42,000 ஆட்டோக்களில் திருத்திய மீட்டர்கள் பொருத்தம்: 2000 ஆட்டோக்கள் பறிமுதல்.

சென்னையில் இயங்கி வரும் 72,000 ஆட்டோக்களில், இதுவரை 42,0000 ஆட்டோக்களில் திருத்தப்பட்ட மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் பெர்மிட் இல்லாமல் இயங்கி வந்த 2,000 ஆட்டோக்களை வட்டாரட்க் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தீவிரமாக அமல்படுத்தும் முயற்சியைப் போக்குவரத்து அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பழைய மீட்டரில் திருத்தம் செய்வதற்கான காலக் கெடு முடிய இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில், மீட்டரை மெக்கானிக்கிடம் கொடுத்துள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் விரைவாக வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் சான்று பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து ஆணையர் பிரபாகர ராவ் கூறியது:
ஆட்டோ மீட்டர் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது. சென்னையில் 72,000 ஆட்டோக்கள் இயங்குவதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவாகியுள்ளபோதும், கட்டண விவர அட்டையை 60,000 ஆட்டோக்கள் மட்டுமே பெற்றுள்ளன.

இதில் 42,000 ஆட்டோக்கள், திருத்திய மீட்டரை பொருத்தியுள்ளன.
இருந்தபோதும், இவர்களில் சிலர் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் சான்று பெறாமல் உள்ளனர்.

கால அவகாசம் முடிய இன்னும் 5 நாள்களே உள்ளதால், விரைவில் சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதிக கட்டணம் வசூலித்த 19 ஆட்டோக்கள் பறிமுதல்: சென்னை ராயப்பேட்டை மற்றும் புரசைவாக்கத்தில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த புகார்கள் குறித்து, வேனில் ரோந்து சென்ற போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அதிக கட்டண வசூலில் ஈடுபட்ட 19 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.                                    

தினமணி, 10-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.