Friday, October 11, 2013

மணிக்கு 205கி.மீ. முதல் 215கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று ஒடிசாவில் கரையைக் கடக்கும் !




வங்கக் கடலில் உருவாகி உள்ள பைலின் புயல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
மணிக்கு 205கி.மீ. முதல் 215கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே பைலின் புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதைத் தொடர்ந்து, ஆந்திரம் மற்றும் ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இரு மாநில அரசுகளும் ஈடுபட்டுள்ளன. 

சற்று முன் நிலவரம்: 
 
வங்கக் கடலில், மத்திய கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ள பைலின் புயல், மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் நகர்ந்து ஒடிஷா மாநிலம் பரதீப்பில் இருந்து தெற்கு- தென் கிழக்கு பகுதியில் 520 கி.மீ., தூரத்திலும்; கோபால்பூரில் இருந்து 530 கி.மீ., தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-வட கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ளது. 

இந்தப் புயலானது, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, ஆந்திரம்-ஒடிசா கடற்கரை பகுதியில் கலிங்கப்பட்டினம்-பரதீப் இடையில் கோபால்பூர் அருகே நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

முன்னதாக, புயல் கரை கடக்கும் போது மணிக்கு 175கி.மீ. முதல் 185கி.மீ வேகத்தில் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது உச்சகட்ட வேகமான மணிக்கு 205கி.மீ. முதல் 215கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தி இந்து -11-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.