Wednesday, October 16, 2013

15 மொழிகளில் 50 லட்சம் புத்தகக்கள் விற்பனையான இறுதிச் சொற்பொழிவு, - தினத்தந்தி

புத்தகப் பெயர்: 
 
இறுதிச் சொற்பொழிவு
 
ஆசிரியர்: 
 
ரேண்டிபாஷ், நாகலட்சுமி சண்முகம்
புத்தக விலை: 
ரூ.199
வெளியீடு: 
 
மஞ்சுள் பப்ளிக் ஹவுஸ், 7/32 அன்சாரி ரோடு, தர்யாகஞ்ச், புதுடெல்லி–110 002
அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழக கணினி துறை பேராசிரியர் ரேண்டி பாஷ். அழகான மனைவி, 3 இளம் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அவருக்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பது திடீரென தெரியவருகிறது.

வாழ்வின் கடைசி கட்டத்தில் இருந்தாலும் ரேண்டிபாஷ் துவண்டுவிட வில்லை. தன் மனைவி, குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இருந்து செய்யக்கூடியவற்றை குறைந்த நாட்களிலேயே செய்ய முனைகிறார்.
இதற்கிடையே பல்கலைக்கழகத்தில் இறுதிச் சொற்பொழிவு ஆற்ற அவருக்கு அழைப்பு வருகிறது. தாங்கள் இறந்து போவதற்கு முன்பு கடைசி முறையாக மாணவர்களிடம் ஒரு உரை நிகழ்த்த வாய்ப்பு அளிக்கப்பட்டால் எதை பேச விரும்புவார்களோ அதை பேசுமாறு கேட்டுக்கொள்ளப்படுவது தான் இறுதிச்சொற்பொழிவு ஆகும்.

இதன்படி ரேண்டிபாஷ் ஆற்றிய உரையின் தொகுப்பு தான் இந்த புத்தகம். 46 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. 50 லட்சம்  புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்து உள்ளது. தமிழில் நாகலட்சுமி சண்முகம் அழகாக மொழிபெயர்த்து இருக்கிறார்.
புத்தகப் பெயர்: 
 
பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்
 
ஆசிரியர்: 
 
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்
 
புத்தக விலை: 
 
ரூ.100
வெளியீடு: 
 
பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை–4
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ‘‘காந்தி யுகம்’’ முக்கியமானது. அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி, வெள்ளையனை விரட்ட முடியும் என்று மகாத்மா காந்தி நினைத்தார். அதே காலக்கட்டத்தில், ஆயுதம் ஏந்தி போராடினால்தான் சுதந்திரம் கிடைக்கும் என்று காங்கிரசிலேயே ஒரு பகுதியினர் எண்ணினார்கள். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால், இறுதி வெற்றி மகாத்மா காந்திக்குத்தான் கிடைத்தது.

சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகளை அருமையாக எழுதியுள்ளார், ‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சிவஞானம். நீண்ட இடைவெளிக்குப்பின், மறுபதிப்பாக அழகிய வடிவமைப்பில் இந்த நூல் வெளிவந்துள்ளது. இளைய தலைமுறையினரும், சுதந்திரப் போராட்டம் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
புத்தக பெயர்: 
பூ மலரும் காலம்
 
ஆசிரியர்: 
ஜி.மீனாட்சி
 
புத்தக விலை: 
ரூ.85
 
வெளியீடு: 
 
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இன்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை–98
 
மொத்தம் 11 சிறுகதைகள் கொண்ட புத்தகம்.

தெளிந்த நீரோடை போன்ற நடையில், கதைகள் விறுவிறுப்பாகச் செல்லுகின்றன. பெண்களின் மனதைப் படம் பிடித்துக் காட்டுவதில் திறமைசாலியாக விளங்குகிறார், கதாசிரியை ஜி.மீனாட்சி.

புத்தக பெயர்: 
திருவள்ளுவர் ஒரு சிறந்த மனோதத்துவ நிபுணர்
ஆசிரியர்: 
தி.கலியராஜன்
புத்தக விலை: 
ரூ.105
வெளியீடு: 
மணிமேகலைப் பிரசுரம், 7 தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை–17
திருக்குறளில் மன இயல் உண்மைகளை திருவள்ளுவர் எவ்வாறு குறிப்பிடுகிறார் என்று சான்றுகளுடன் கூறப்பட்டுள்ளது.
வெவ்வேறு தலைப்புகளில் 8 கட்டுரைகளில் ஏராளமான தகவல்கள் அடங்கி உள்ளன.

புத்தக பெயர்: 
விஸ்வபிரம புராணம்
ஆசிரியர்: 
-
புத்தக விலை: 
ரூ.650
வெளியீடு: 
 
வி.சுப்பிரமணியன் ஆச்சாரி, நிர்வாக டிரஸ்டி, பிரம்மஸ்ரீ வைத்தியநாத ஆசாரியர் பவுண்டேஷன், 70, முதல் தளம், 1 ‘‘பி’’ கிராஸ், இரண்டாவது மெயின் ரோடு, 5–வது பிளாக், கிருஷ்ணா லே அவுட், பானசங்கரி 3–வது ஸ்டேஜ், பெங்களூரு–560 085
வடமொழியில் புகழ் பெற்ற நூல் ‘‘விஸ்வபிரம புராணம்.’’ இது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, 1894–ம் ஆண்டில் முதல் பதிப்பு வெளிவந்தது.
இப்போது, 119 ஆண்டுகளுக்குப் பிறகு, மறுபதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வைதீகர்களுக்கும், புரோகிதர்களுக்கும், ஜோதிடர்களுக்கும் பயனளிக்கக்கூடிய நூல் இது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.