Tuesday, September 10, 2013

டியூசன் செல்லாதீர்கள்- மர்மபோஸ்டரகள் - நாகர்கோயிலில் பரபரபபு !:


Image


தற்கொலைகளைத் தடுக்க ‘மாணவ, மாணவிகளே டியூசன் செல்லாதீர்கள்’ நாகர்கோவிலில் மர்ம போஸ்டர்களால் பரபரப்பு -

நாகர்கோவில்:‘தற்கொலைகளை தடுக்க மாணவ, மாணவிகளே டியூசன் செல்லாதீர்கள்‘ என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் நாகர்கோவில் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குமரி மாவட்டத்தில் சமீப காலமாக தற்கொலைகள் அதிகரித்துள்ளது. அதிலும் இளம்பெண்கள் தற்கொலை அதிகம் நடக்கிறது. இளம்பெண்கள் இந்த விபரீத முடிவை எடுக்க பாலியல் கொடுமையும் ஒரு காரணமாக உள்ளது. உடல், மனரீதியாக ஏற்படும் பாதிப்புகளை வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலை முடிவை எடுக்கின்றனர்.

மாணவிகளை பொறுத்த வரை பள்ளி, டியூசன் சென்டர், கல்லூரிகளில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். மாணவிகளை காதலிப்பதாக ஏமாற்றி செல்போன், வீடியோவில் ஆபாச படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் இன்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அகில உலக தற்கொலை தடுப்பு மையம் என்ற தலைப்பில் ஒட்டப்பட்டு இருந்த இந்த போஸ்டரில், ‘சமூக உணர்வுகளை படுகொலை செய்யும் டியூசன் பழக்கத்தை வேரறுப்போம். மாணவ, மாணவிகளே டியூசன் செல்லாதீர். தற்கொலையை தடுப்போம்‘ என அச்சிடப்பட்டு இருந்தது.

போஸ்டரில் யார் பெயரோ, தொடர்பு எண்களோ எதுவும் இல்லை. இந்த போஸ்டர் எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது என்பது பற்றிய விவரங்களும் இல்லை. ஆனால் பள்ளி, கல்லூரிகள் முன்பும், மாணவ, மாணவிகள் அதிகம் செல்லும் வழிப் பாதைகளிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. டியூசனை மையப்படுத்தி ஒட்டப்பட்டு இருந்த இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி :- தமிழ்முரசு-10-09-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.