Tuesday, September 10, 2013

நன்மக்கட்பேறு வேண்டுமா? மணிமூர்த்தீஸ்வரம் வாருங்கள் !




குழந்தைப்பேறு வேண்டுமா ? மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்டகணபதியை வணங்குங்கள் !


சுமார் 600-1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில். கணபதியை மூலவராகக் கொண்டு, ஐந்து நிலைகளைக் கொண்ட கோபுரத்தையும் உடைய

கோவில். உச்சிஷ்ட கணபதி என்னும் பெயரில் தாமிரபரணிக் கரையில் அருள்பாலிக்கின்றார் கோயிலைச் சுற்றி இடிபாடுகளுடன் கூடிய மதில்

சுவர்களின் நீள உயரங்க்களைப் பார்த்தால் இதன் தொன்மை உறுதிப்படும். இக்கோயிலில் நெல்லையப்பருக்கும் தனி சந்நிதி அமைந்துள்ளது.

தாமிரபரணி ஆறு தென் வடலாக ஓடுவதால் தட்ஷிணகங்கை என்றும் அழைக்கப்படும், மணிமூர்த்தீஸ்வரம் என்னுமிடத்தில் இக்கோயில்

அமைந்துள்ளது. பெயர் புதியதாக உள்ளதே என்று பிரமிக்க வேண்டாம். நெல்லை சந்திப்பு பை-பாஸ் சாலை அருகில்தான் இக்கோயில்

உள்ளது. திருமணமாகாத பிள்ளையாரை இக்கோயிலில், பெண்ணொருத்தியை அரவணைத்துள்ள கோலத்தில் காணலாம்.

உச்சிஷ்ட என்பதற்கு பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கையை வைத்துள்ளவர் என்று பொருள் கூறுகின்றனர். இதன்மூலம்

அசுரத் தன்மையுடைய குழந்தைகள் பிறப்பதைத் தடுத்தாட்கொள்பவர் என்பது ஐதீகம். இவ்விநாயகரை வணங்கினால் மகப்பேறு தவறாமல்

கிட்டும் என்பது ஆத்திகர்களது நம்பிக்கை. மேலும், சித்திரை மாதத்தின் முதல்நாளன்று சூரியனின் கதிர்கள் இந்த உச்சிஷ்ட கணபதியின் மீது

விழும் வண்ணம் கோவில் அமைக்கப்பட்டுள்ளது பிறிதொரு சிறப்பான அம்சமுமாகும். தமிழகத்தில் சில கோயில்கள் சிவபெருமான்மீது

சூரியக்கதிர்கள் ஆண்டுதோறும் இருமுறை மும்மூன்று தினங்கள் விழும் வண்ணம் கட்டப்பட்டுள்ளன. ( எடுத்துக்காட்டு :- அருள்மிகு

சங்கரலிங்கப் பெருமான், சங்கரன்கோயில் ) ஆனால், விநாயகரை மூலவராகக் கொண்ட கோயிலில் சூரியக் கதிர் விழும் வண்ணம் வேறு

கோயில்கள் இருப்பதாகத் தெரியவில்லை. விநாயகரை மூலவராகக் கொண்ட இராஜகோபுரத்துடன் கூடிய கோயில்களும் மிகவும் அரிதாகவே

உள்ளன.

சுவாமிமலையை அடுத்துள்ள, திருவலஞ்ச்சுழியிலும் கணபதியை மூலவராகக் கொண்ட இராஜகோபுரத்துடன் கூடிய கோவில்

உள்ளது.

நெல்லை என்றால் நவ திருப்பதி, நவ கைலாயம் என்ற புண்ணிய தலங்கள் குறித்த எண்ணங்கள் தோன்றுவதுபோல்,

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவிலும் நிச்சயமாக இடம்பெறும். கணபதியை வழிபடும் வழக்கம் கம்போடியாவிலிருந்து

பரவியதாகத்தெரிகின்றதது. இன்று விநாயக சதுர்த்தி. பழைமை வாய்ந்த விநாயகர் கோவிலைப்பற்றிய பதிவு சாலவும் பொருத்தமே.

0 comments:

Post a Comment

Kindly post a comment.