Thursday, August 29, 2013

பிராணனை வென்றால் மரணமிலாப் பெருவாழ்வினைப் பெறலாம் !


"நான் ஆத்மாவே" என்று உணரச் செய்வதே சித்தநெறியின் சாரம்."நான் உண்மையில் இந்த சரீரம் அன்று;
இந்த மனமும் அன்று;
என்னைப் பொறுத்தவரையில் பாவமும் இல்லை; புன்ணியமும் இல்லை.
அவ்விதமாயின் உண்மையில் நான் யார் ?
அகண்ட சச்சிதானந்தமாய் என்றும் எதிலும் நிலைபெற்று விளங்கும் ஆத்மாவே நான்.
இந்த ஆத்மாவே எல்லாச் சரீரங்களிலும் தன்னைத் தோற்றுவிக்கிறது'
இதனை உணர்ந்தவனே ஜீவன் முக்தன்.

Image
மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய "ஞானத்தாழிசை" 5-வது பாடல்.

"பத்தோடிரு கலையாகிய, பனிரெண்டினில் நாலும்
பாழ்போக்கிட மீண்டே வரும் பதியிங்கலை நாலும்
பெற்றோடிவத் திங்க்கேறிய பேர்மைந்தனைக் கண்டு
பேசும்நிலை யோடுமுற வாகிப்பிணக் கற்றாய்
கற்றோருடன் கற்றோமெனும் வித்தாரமு மற்றாய்
கானற்புன லோகப்பிடி மானத்தையு மாற்றாய்
சித்தோடிரு சித்தாகிய சிற்றம்பல மீதே
சேர்ந்தாய்- குறை தீர்ந்தாய் இனி வாழ்வாயிரு மனமே"

"ஞானத்தாழிசை" ஐந்தாம் பாடலுக்கான ஐந்தருவி, சுவாமி சங்கரானந்தாவின் விளக்கவுரை
Image
கீழ் நோக்கிச் செல்கின்ற நான்கு அங்க்குல சுவாச கதியை உள்ளே இருக்கின்ற எட்டங்ன்னிரண்டங்க்குன்கலத்துடன் சேர்த்துக் கொல்லன் துருத்திக்கொண்டு ஊதுவதுபோல் ஊதினால் உள்ளிற்கூடி ஒவ்வொரு அங்குலமாக அடங்கிப் பின் சுழுமுனைப் பூட்டைத் திறந்து பிரம்மாந்திரத்தில் பிரவேசித்துப் பிராணாபானங்கள் ஒன்றுபட்டு பன்னிரண்டு அங்குலமும்
ஒரே கதியாகிச் சிவமயமாகிறது..அச்சிதாகாச வெளியாகிய சிதம்பரத்தில் ஆத்மஜோதியாகிய நடராசனின் தாண்டவத்தைக் கண்டபின் ஞானமில்லாத ஜீவசமுதாயம் உயிர்பெற்று எழுகிறது.

இதையே பின்வரும் யாழ்ப்பாணத்து நாடோடிப்பாடலும் விளக்குகின்றது.,

"மஞ்சளும் நீரும் சுற்றும் வேளை
மாடும் கன்றும் திரும்பும் வேளை
காலை மடக்கடி-காமாட்சி- நீ
காலை மடக்கடி காமாட்சி" -என்கிறது

மேற்படி பாடலுக்கான விளக்கம் .

இதுபோன்று பல நாடோடிப் பாடல்கள் பரம்பரையாகப் பாடப்பட்டு வந்தபோதிலும் அவற்றின் உட்பொருள் என்ன என்பதைப் பற்றியோ, எந்தவிதமான கருத்தின் அடிப்படையில் இப்பாடல்கள் பாடப்பட்டன என்பதைப் பற்றியோ பெரும்பாலோர் அக்கறை கொள்வதில்லை. மேற்காணும் பாடலும் அவற்றில் ஒன்றே. இப்பாடல் விளக்குவது மிக நுணுக்கமான யோக தத்துவக் கருத்தாகும். அதாவது சர்வசதா காலமும் ங்நம்முள்ளிருந்து 12 அங்குல சுவாசமானது வெளியே சலித்து அதோ முக்லமாய் நீட்டிக் கொண்டிருக்கிறது. அதனால் "கால்" என்றும் "வாசி" என்றும் சொல்வார்கள். இவ்வாறு நமக்குள் இருந்து வெளியே நீட்டப்பட்டு சலிக்கும் பிராணனை அவ்வாறு நீட்டிக்காமல் மடக்கி உள்ளேயே ஐக்கியப்படுத்த வேண்டும் என்பதே
இப்பாடலின் கருத்தாகும்.

மஞ்ச்சளும் நீரும் சுற்றும் வேளை என்பது உதய காலத்தில் சூரியனை நோக்கி வழிபாடு இயற்றும்போது பெண்கள் மஞ்ச்சளும் நீரும் கலந்த ஆலத்தி எடுப்பார்களாதலால் அந்த உதயவேளை என்பது பொருளாம். மாடும் கன்றும் திரும்பும் வேளை என்பது மாடும் கன்றும் மேய்ந்து வயிறு நிரம்பித் தம் இருப்பிடத்திற்குத் திரும்பும் வேளையாகிய மாலையில் என்பது வெளிப்படை. எனவே, காலையிலும் மாலையிலும் மற்ற எல்லா வேளைகளிலும் காலை மடக்குதலாகிய வாசி யோகம் செய்ய வேண்டும் என்பதாம்.

இக்கருத்தினையே திருமூலரும் பின் வருமாறு விளக்குகிறார்.

Image


[centre]திருமூலர்

[/centre]
" ஏற்றி யிறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் ப்டிக்கும் கணக்கறி வாறில்லை
காற்றைப் ப்டிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே
நாசிக் கதோமுகம் பன்னிரெண் டங்குலம்
தீர்த்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்தும்
தேகத்திற் கென்றும் சிதைவில்லை தானே "

இவற்றின் மூலம் காலனை வெல்லும் முறையைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். பிராணாபானங்க்களை உள்ளேயே ஏற்றி இறக்கிக்கொண்டிருந்தால் இருகாலும் ஒன்றாகிப் ( கால் - காற்று ) பூரித்துத்தானே கும்பமாகி சமஸ்டியில் ஐக்கியமாகிறது. இந்த வழி தெரிந்தவன் எமனை வெல்லுகிறான். மரணவிலாப் பெருவாழ்வதனைப் பெறுகிறான், பிராணனை வென்றதால்.

கிடைக்குமிடம்:- சங்கராஸ்ரமம்,
ஐந்தருவி, குற்றாலம் P.O.
திருநெல்வேலி மாவட்டம்
627 802
---------------------------------------
04633 -- 291166

0 comments:

Post a Comment

Kindly post a comment.