Sunday, August 4, 2013

உலகில் வாழும் 200 ஆண்களில் ஒருவர் செங்கிஸ்கானின் வாரிசு -மோகன ரூபன்



2003-ஆம் ஆண்டு ஆசியாக் கண்டத்தில் 23 நிபுணர்கள் ஒருங்கிணைந்து மரபணு தொடர்பான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஒன்று நடத்தினர். அதன் முடிவு அதிர்ச்சி அளித்தது. உலகின் மொத்த ஆண்களில் அரை விழுக்காடு பேர், மங்கோலிய மன்னன் செங்கிஸ்கானின் வாரிசுகள் என்பதுதான் அந்த அதிர்ச்சியான முடிவு.

செங்கிஸ்கானின் பேரரசிற்கு உட்பட்ட பகுதிகளில் 16 வகையான மக்கள் குழுமங்களில் இருந்து ஆண்களின் ரத்த மாதிரி எடுத்து சோதிக்கப்பட்டது. அதில் எட்டு விழுக்காடு பேருக்கு ஒரே மாதிரியான குரோமோசோம்கள் இருந்தன.

"ஒய்' குரோமாசோம்கள் என்பவை ஆண்களிடம் மட்டுமே காணப்படும். "ஒய்' குரோமோசோம்களின் அலாதியான மரபணு துணுக்குகளை வைத்திருக்கும் ஆண்கள் அனைவருமே ஒரே மூதாதையரிடமிருந்து வந்தவர்கள் எனலாம். அதன்படி பார்த்தால், உலகில் வாழும் 16 மில்லியன் ஆண்கள் செங்கிஸ்கானின் வம்சாவழிகள். அதாவது, உலகில் வாழும் 200 பேரில் ஒருவர் செங்கிஸ்கானின் வாரிசு!

இது ஆச்சரியமான தகவலாக இருக்கிறது என்கிறீர்களா?

 "மோனாலிசா' ஓவியத்திற்குள் ஒளிந்திருக்கும் ரகசியங்கள், பிரபல ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் ஒரு பெண்ணாக இருக்கக்கூடும் என்கிற அதிர்ச்சித் தகவல்,

ஈஸ்டர் தீவில் உள்ள 887 சிலைகள், நாம் அன்றாடம் குடிக்கும் காபியின் சரித்திரப் பின்னணி என்று

 புதிய பல அதிசயத் தகவல்களைத் தருகிறது மோகன ரூபன் எழுதியிருக்கும் "விடை தெரியாத விந்தை மர்மங்கள்' என்கிற புத்தகம்.

கி.பி.1139-ஆம் ஆண்டில் அயர்லாந்தைச் சேர்ந்த புனித மலாச்சி என்கிற கத்தோலிக்கப் பேராயர் அதன் பின் வரப்போகும் 112 போப்பாண்டவர்கள் யார் யார் என்பதைப் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

புதிதாக வரப்போகும் போப்பைப் பற்றி ஒரு சில வரிகளில் குறிப்பும் தந்திருக்கிறார்.

109-ஆவது போப்பாண்டவர் முதலாம் ஜான்பால். இவரைப் பற்றிய புனித மலாச்சியின் குறிப்பில் "பாதி நிலா' என்று குறிப்பிட்டிருக்கிறார். பதவியேற்ற ஒரு மாதத்திலேயே அவர் இயற்கை எய்திவிட்டார்.

பல்வேறு தகவல்களைப் பொறுக்கி எடுத்துப் புத்தகமாக்கி இருக்கிறார் மோகன ரூபன்.

ஆனால், சரியான தகவல்களைப் பொறுக்கி எடுத்து, சுவாரஸ்யமாகப் படைத்திருக்கிறாரே, அதற்காகப் பாராட்டத்தானே வேண்டும்?                                

நன்றி:- கலாரசிகன், தமிழ்மணி, தினமணி, 04-08-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.