Wednesday, July 3, 2013

புதிய சிம் கார்டுகளை வாங்கிட கைரேகை அவசியம் !

போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டுகளை வாங்கி, அவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில், புதிய சிம் கார்டு வாங்குபவர்கள் கைரேகை அல்லது உடற்கூறு சார்ந்த பிற சான்றுகளை அளிக்கும் புதிய முறை விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத் தொடர்புத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. எனவே, உடற்கூறு சார்ந்த சான்றிதழ்கள் சேகரித்து கையாளும் பணி, தேசிய புலனாய்வு அமைப்பகத்துடன் விரைவில் இணைக்கப்படலாம்.

சிம் கார்டுகள் விற்பனை செய்வதற்கு முன், விண்ணப்பதாரர் பற்றிய தகவல்களை முற்றிலும் சரிபார்த்தபிறகே வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டது. தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இந்த உத்தரவை பின்பற்றாதது கண்டறியப்பட்டது.

கடந்த மாதம் நடந்த மாநில முதல்வர்கள் மாநாட்டில் இத்திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதையடுத்து போலி ஆவணங்களை கண்டறிந்து தடுக்கும் பயனுள்ள இத்திட்டத்தை அமல்படுத்த  வேண்டியது அவசியம் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் வலியுறுத்தியுள்ளார்.                   

நன்றி :- மாலைமலர், 03-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.