Thursday, July 11, 2013

” இந்தியாவில் ஆறாத புண் நோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை”

சென்னையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான நவீன புண்நோய் மருத்துவக் கருத்தரங்சென்னையில் கில் நோய் விழிப்புணர்வு சி.டி.யை கொச்சின் அம்ருதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்றார் ஹைகேர் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராஜேஷ்கேசவன். உடன் (இடமிருந்து) கால் மற்றும் பாத அறுவைசிகிச்சை மருத்துவர் டாக்டர் அரவிந்த் சென்கல் சயின்ஸ் பேராசிரியர் டாக்டர் அருண்பால் வெளியிட, பெற்றுக் கொள்கினையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான  நவீன புண்நோய் மருத்துவக் கராஜகோபாலன், ஹைகேர் மருத்துவமனை தலைமை இயக்குநர் டாக்டர் வி.பி. நாராயணமூர்த்தி.


இந்தியாவில் சர்க்கரை நோய்,புற்றுநோய் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக உருவாகும் புண் போன்ற ஆறாத புண் நோய்கள் பராமரிப்பு தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லை என்று கொச்சின் அம்ருதா இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் பேராசிரியர் அருண்பால் கூறினார்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான நவீன புண்நோய் பராமரிப்பு மருத்துவம் குறித்த கருத்தரங்கில் அவர் பேசியது
இந்தியாவில் தற்போதுள்ள 2.5 கோடி சர்க்கரை நோயாளிகளில் 60 வயதிற்கும் மேற்பட்ட சுமார் ஒரு லட்சம் நோயாளிகள் ஆறாத புண்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நோய்க்கான உரிய சிகிச்சை மேற்கொள்ளும் வசதி வாய்ப்பற்றவர்களாகவும்,குடும்பத்தினரின் பராமரிப்பற்றவர்களாகவும் உள்ளனர். இதனால் தினமும் சராசரியாக 386 ஆறாத புண் நோயாளிகள் தங்களது கை,கால்களை இழந்து வருவது கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போது 30 வயதுக்குட்பட்டவர்களும் ஆறாத புண்நோயால் பாதிக்கப்பட்டு வருவது கவலைக்குரியது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வரும்சர்க்கரை நோயாளிகளுக்கென தனி மருத்துவச் சிகிச்சைப் பிரிவில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெரியவர்களின் கை,கால்களை மாதம் ஒருமுறை பரிசோதிக்க வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
இதன் மூலம் ஆறாத புண் நோயாளிகள் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடியும். வீட்டில் உள்ள பெரியவர்களின் கால்களில் ஏதேனும் புண் ஏற்பட்டால் உரிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என்றார்.

"ஆறாதபுண் நோய் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் உருவாக்குவது மூலம் சர்க்கரைநோûயால் ஏற்படும் கை, கால் இழப்பை ஒரளவு கட்டுப்படுத்த முடியும்' என்றார

ஸ்டான்லி மருத்துவமனை முன்னாள் ஆய்வு மையம் மற்றும் சீரமைப்பு இயக்குனர் ஜி.பாலகிருஷ்ணன், மும்பை ஆசிர்வாத் மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர் மிலிந்த் ரூக்,அப்பல்லோ மருத்துவமனை தலைமை ரத்தநாள அறுவைச் சிகிச்சை நிபுணர் வி.பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி :- தினமணி, 09-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.