Saturday, July 20, 2013

பீஹார் முங்கர் மாட்டத்தில் சட்டவிரோத துப்பாக்கிச்சால! 99 துப்பாக்கிகள் கடத்தல்!

கைது செய்யப்பட்ட இருவர்
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள்
காரின் முகப்பு விளக்குக்குப் பின்புறம் உள்ள பகுதியில் மறைத்து கடத்தப்பட இருந்த 99 நாட்டு கைத்துப்பாக்கிகளை தில்லி போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து, தில்லி காவல் துறை அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியது:
காவல் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், சோனியா விஹாரில் காரில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, காரின் முகப்பு விளக்குக்குப் பின்புறம் உள்ள பகுதியில் 99 நாட்டு கைத்துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் இருவரும் பிகார் மாநிலம், முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்த மிஸ்ரா, ஃபெரோஸ் ஆலம் என்பது தெரிய வந்தது.

கடந்த ஆண்டில், முங்கரில் தயாரிக்கப்பட்ட 130 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆண்டு 60 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினார்.

சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கி தொழிற்சாலைகளுக்கு பிகார் மாநிலம், முங்கர் மாவட்டம் பெயர் பெற்றது என்று கூறப்படுகிறது.

இப்பகுதியில் இருந்து இந்திய முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு துப்பாக்கிகள் கடத்திச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அண்மையில் புணே குண்டுவெடிப்பு தொடர்பாக கைதான 5 பேர்களிடம் இருந்து முங்கர் தயாரிப்பு சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முங்கரில் தயாரிக்கப்படும் நாட்டுத் துப்பாக்கிகள் நவீன துப்பாக்கி போன்று இருப்பதால், அவற்றை சமூகவிரோதக் கும்பல்கள் வாங்குகின்றனர்.

கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தேசிய தலைநகர் வலயம் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட பகுதிகளிலும் முங்கர் ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன என்று போலீஸார் கூறினர்                   

நன்றி :- தினமணி, 12-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.