Wednesday, April 17, 2013

காந்தியவாதி கே.பி. இலகுமையா காலமானார்



தியாகி எல்.கே.பி. இலகுமையா 100ஆவது பிறந்தநாள் விழா, அக்டோபர்,3,2012


காந்திக்கிராமம் உருவாக்க 25 ஏக்கர் நிலம், ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை தானமாக வழங்கிய சுதந்திரப் போராட்டத் தியாகி எல்.கே.பி. இலகுமையாவின் நூறாவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

காந்திக்கிராமக் கிராமியப் பல்கலைக் கழகம், காந்திக்கிராமக் குடும்ப நல அறக்கட்டளை, டாக்டர் சௌந்தரம் அறக்கட்டளை இணைந்து நடத்திய விழாவுக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தன் தலைமை வகித்தார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் சோம.ராமசாமி, முன்னாள் துணைவேந்தர் ஜி.பங்கஜம், காந்திக்கிராம அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம்.ஆர்.இராஜகோபால், செயலாளர் ஆடிட்டர் கே.சிவக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எஸ்.பொன்னம்மாள், மா.தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

\
காந்தியடிகளின் உத்தரவுபடி டாக்டர் டி.எஸ். சௌந்தரம் காந்திகிராமம் அமைக்க இடம் தேடிய போது திண்டுக்கல்லை அடுத்த சின்னாளபட்டி அருகே உள்ள 25 ஏக்கர் நிலத்தையும், ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தியாகி லகுமையா ஒப்படைத்து காந்திகிராமத்தை உருவாக்கியதையும், 2.2.1946ஆம் ஆண்டு மதுரைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த காந்தியடிகளை பொதுமக்கள் தரிசிக்கும் வகையில் அம்பாத்துரை ரயில் நிலையம் அருகே ரயிலை லகுமையா நிறுத்தியதையும், அவரின் சுதந்திரப் போராட்ட ஈடுபாட்டினையும் விழாவில் பேசியவர்கள் நினைவு கூர்ந்தனர்.

 விழாவில் கலந்து கொண்ட தியாகி லகுமையாவின் சார்பில் அவரது மகன் இராஜேந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார்.

 இ 9 16-04-2013லகுமையா பெயரில் அறக்கட்டளையைத் துவக்கி, திண்டுக்கல் எம்.பி. என்.எஸ்.வி.சித்தன் ரூ.50 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினார்.

நன்றி :- தினமணி 03-10-2012
 
காந்தியவாதி  கே.பி. இலகுமையா காலமானார்

சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியவாதியுமான எல்.கே.பி. லகுமையா, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார். ( 16-04-2013 )

 அவருக்கு வயது 100. அவருக்கு இராஜேந்திரன், இராமர் ஆகிய இரு மகன்களும், இராஜாத்தி என்ற மகளும் உள்ளனர்.

காந்தியவாதியான இவர், 1946ஆம் ஆண்டு மகாத்மா காந்தி வந்த இரயிலை மறித்து காந்தியின் காலடிகள் சின்னாளப்பட்டி பகுதியில் பதிய, காரணமாக இருந்தவர்.

 சின்னாளப்பட்டி பேரூராட்சியின் தலைவராகவும், காந்திக் கிராம நிறுவனத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

 காந்திக் கிராம நிறுவனம் துவங்கப்பட்டபோது, தனக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலம் மற்றும் ரூ. 25 ஆயிரம் நிதியும், ஒரு வீட்டையும் தானமாக வழங்கினார்.
 இலகுமையாவின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.                                                                                                                             

நன்றி :- தினமணி, 17-04-2013


1 comments:

  1. விக்கிப்பீடியாவில் எல். கே. பி. லகுமையா http://ta.wikipedia.org/s/2r1a

    ReplyDelete

Kindly post a comment.