Tuesday, February 5, 2013

யானைக் காப்பி:கோப்பை £30 (ரூ.2500) & cow urine ?



லண்டன் பத்திரிக்கைகள் ஒரு சுவையான செய்தி வெளி யிட்டிருக்கின்றன. யானையின் ஆசன வாயிலிருந்து வரும் காப்பிக் கொட்டையை வறுத்து தயாரிகும் காப்பி இது. படிக்க கொஞ்சம் அறுவெறுப்பாக இருந்தாலும் குடிக்கச் சுவையாக இருக்குமாம். ஒரு கோப்பை 30 பவுண்டுகள் (இந்திய ரூபாய் ரூ2500).

யானைக்குக் காப்பிக்கொட்டை பழங்களைச் சாப்பிடக் கொடுப்பார்கள். அது அவைகளை முழுதும் ஜீரணிக்காமல் பின்பக்கம் வழியாக வெளியே தள்ளிவிடும். அந்த யானை லத்தியிலிருந்து ஒவ்வொரு காப்பிக்கொட்டை பழத்தையும் பிரித்தெடுக்க வேண்டும். பிறகு கொட்டைகளை வெளியே எடுப்பார்கள். யானை வயிற்றிலுள்ள அமிலங்கள் அந்தக் காப்பிக் கொட்டைகளுக்கு ஒரு மாயாஜாலச் சுவையைக் கொடுக்கிறது.

கனடா நாட்டைச் சேர்ந்த பிளேக் டின்கின் என்பவர் 3 லட்சம் பவுன்ட் செலவில் இந்த ஏற்பாடைச் செய்துள்ளார். அவர் 20 யானைகளுக்கு இப்படிக் கொடுத்து 70 கிலோ காப்பிக்கொட்டை உற்பத்தி செய்துவிட்டார். முழுதும் விற்றுப்போய்விட்டன.

ஒரே கேள்விதான். யானைக்கு முழுதும் ஒவ்வாத ஒரு பொருளைச் சாப்பிடக் கொடுத்து பின்னர் அதையே வெளியே தள்ளச் செய்வது நியாயமா? மேலை நாட்டினருக்குப் பணம் கிடைத்தால் போதும், தார்மீக சிந்தனை பறந்தோடிப் போய்விடும்.






யானை லத்தியின் மகிமை

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது தமிழ் பழமொழி. யானையின் தந்தத்தை மத சம்பந்தமான சிலை , பூஜைப் பொருட்களுக்குப் பயன்படுத்துவதை அறிவோம். கேரளத்தில் யானை வால் முடியை நோய்த் தடுக்கும் தாயத்தாகப் பயன்படுத்துவர். யானை லத்தி போட்டால் அதை மிதிக்க பெரியோர்களும் சிறியோரும் ஓடோடி வருவர். காலில் உள்ள பித்தவெடிப்பு, சேற்றுப் புண் இவைகளை குணப்படுத்தும் ஆற்றல் அதற்குண்டு. யானையின் மூத்திரத்தையும் தலையில் தெளித்துக் கொள்வார்கள். யானையின் துதிக்கை வழியாக வரும் தண்ணிரை தலையில் விழச் செய்வார்கள். இதை கஜ லெட்சுமி சிலைகளிலும் காணலாம். 2200 ஆண்டுகளுக்கு முந்திய கஜலெட்சுமி சிலைகள் இலங்கை, டென்மார்க் வரை சென்று அங்கு நாணயங்களிலும் பாத்திரங்களிலும் பொறிக்கப்பட்டன. இது பற்றி எனது முந்தைய கட்டுரைகளில் விரிவாகக் காணலாம்.

யானை லத்தி நல்ல உரமும் கூட.

யானை பற்றிய பழமொழிகளும் நாம் அதை எவ்வளவு மதித்தோம் என்பதைக் கட்டுகிறது. இதை எல்லாம் படித்த பின்னர் மேற்கூறிய யானை லத்தி காப்பியைக் குடிக்க நாம் எல்லோருக்கும் தயக்கமே இருக்காது. விலையை மட்டும் குறைத்தால் போதும்.

படிக்கவேண்டிய எனது மற்ற கட்டுரைகள்:

1.யானை பற்றிய நூறு பழமொழிகள்


Contact: swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com    



2.Gajalakshmi in Kalidasa and Sangam Literature

 3.Gajendra Moksha in Africa 

by Tamil and Vedas on December 13, 2012  •  Permalink


தகவல் உதவி :-

https://tamilandvedas.wordpress.com/author/tamilandvedas/page/7/

0 comments:

Post a Comment

Kindly post a comment.