Wednesday, January 16, 2013

தமிழக அரசு விருதுகள்: முதல்வர் வழங்கினார்



தேனி மாவட்டம், லோயர்கேம்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கர்னல் பென்னி குவிக் நினைவு மண்டபத் திறப்பு விழாவில், திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு அரசு விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

விருது பெற்றவர்கள் விவரம்:

திருவள்ளுவர் விருது- கலைமாமணி டாக்டர் ந.முருகன் (சேயோன்),

அண்ணல் அம்பேத்கர் விருது- தா.பாண்டியன்,

தந்தை பெரியார் விருது- டாக்டர் கோ.சமரசம்,

பேரறிஞர் அண்ணா விருது- கே.ஆர்.பி. மணிமொழியன்,

பெருந்தலைவர் காமராஜர் விருது- சிங்காரவடிவேல்,

மகாகவி பாரதியார் விருது- பாரதிக் காவலர் கு.ராமமூர்த்தி,

பாவேந்தர் பாரதிதாசன் விருது - பேராசிரியர் முனைவர் சோ.ந.கந்தசாமி,

தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது - பிரேமா நந்தகுமார்,

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது- நா.ராசகோபாலன் (மலையமான்).

விருதுடன் தலா ரூ.1 லட்சம் காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றையும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ. 2 ஆயிரம் மாத உதவித்தொகைக்கான உத்தரவையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் இராசாராம்நன்றிகூறினார்.                                                                                                        

நன்றி :- தினமணி, 15-01-2013.                                                                                                           

0 comments:

Post a Comment

Kindly post a comment.