Tuesday, January 15, 2013

ஆற்காடா ? ஆர்க்காடா ? எது சரி ?



சோழ மன்னனுக்குரிய ஆத்தியைக் குறிக்கும் 'ஆர்' என்ற மரத்தால் பெயர் பெற்ற ஊர் ஆர்க்காடு ஆகும். ஆர்க்காடு என்ற ஊர்ப்பெயரே இன்று மாவட்டத்திற்கும் பெயராக வழங்கி வருகிறது.

சங்க இலக்கியம் குறிக்கும் ஆர்க்காடு 'அழிசில்' என்ற குறுநில மன்னனுக்கு உரியதாய் இருந்துள்ளது. இப்பொழுது வடவார்க்காடு மாவட்டத்தில் பாலாற்றங்கரையில் இவ்வூர் காணப்படுகிறது.

"படுமணி யானைப் பசும்பூட் சோழர் கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்" 2

என்னும் அடிகள் ஆர்க்காடு சோழர்களின் நகரமாக இருந்தததைக் குறிப்பிடுகிறது. இவ்வூரைச் சேர்ந்தவராக 'ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்' என்னும் புலவர் காணப்படுகின்றார்.

ஆற்காடு என்று எழுதாமல், 

ஆர்க்காடு என்றே எப்பொழுதும் எந்த இடத்திலும்

எழுதுவதே, சரியான தமிழ் வார்த்தையைப் 

பயன்படுத்துவதாக அமையும்.

தக்க நேரத்தில் உதவிய தோழியர் ப.செந்தில்குமாரிக்கும், வெளியிட்ட முத்துக் கமலம் இணைய இதழ் ஆசிரியர்,  நண்பர் தேனி.எம்.சுப்பிரமணிக்கும், ”ஆர்க்காடு பெயர்க் காரணம்” என்று கூகிளில் தேடியபோது கிடைக்கச் செய்த கூகிளுக்கும் நன்றிகள் பற்பல உரித்தாகுக.



நன்றி :-  http://www.muthukamalam.com/essay/literature/p50.htm

0 comments:

Post a Comment

Kindly post a comment.