Thursday, January 24, 2013

புலமை சுமந்த புயல் “மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்- முனைவர் ய.மணிகண்டன்



புலமை சுமந்த புயல் :-

வேட்டுக் கருத்தையெலாம் வீசித் தமிழ்மாண்பை
மீட்கும் வெளிச்ச விழி !

கண்டறியா உண்மைகளைக் காட்டுகின்ற பாவாணர்
வண்டமிழ் பெற்ற வளம் !

நலஞ்செய்தார் செந்தமிழ்க்கே நாளும் பாவாணர்
புலமை சுமந்த புயல் ! 

மூத்ததமிழ்த் தாயின் முடிக்கணியாய் இம்மண்ணில்
பூத்த பவளமல்லிப் பூ !

இரண்டாம் உ.வே.சா. என ய.மணிகண்டனை நான் மதிக்கக் காரணம்,
அவருடைய பதிப்புத் திறன், பாடபேத ஆய்வு, மொழி அறிவு-எல்லாவற்றையும் இவர் கொண்டிருப்பதோடு- ஆசையோடு கூடிய ஈடுபாடும், அயரா முயற்சியும் அப்படியே இவரிடம் இருப்பதுதான்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் -1995. 



ுலை சுமந்துயல் பாவாணர்,  

ஆக்கியோர்: ய.மிகண்டன்  

 
இராசுணா பிப்பம்
101, 3/3 சீனியஸ் சால
ாப்பேட்டை,
ென்னை-600 015

க்கங்கள் 32.
ிலை ரூ.30/- 


ஈராயிரம் ஆண்டுத் தொன்மைவாய்ந்த தமிழ்க்கவிதை வடிவமாகிய குறள்வெண்பா வடிவத்தில் மலர்ந்துள்ள பாவாணர் குறித்த இக்கவிதைத் தொகுதி, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொருவர் வீட்டிலும்  கட்டாயம் இடம்பெற வேண்டும்.

1 comments:

  1. podhuvan sengai

    02:16 (16 hours ago)

    to me
    தனித்தமிழ் ஊற்றால் என்னைத் தழைத்திடச் செய்த வள்ளல்
    கனித்தமிழ்க் கரும்பின் தொன்மை காட்டிய தமிழ்வேள் வேந்தன்
    இனித்திடும் தமிழ்ச்சொல் வேரே எம்மொழிக் கும்வேர் என்ற
    இனத்தமிழ் மறவர் எம்இல் திருந்தநாள் எண்ணிப் பூப்பேன்.

    பாவாணர் இல்லத்தில் நான், என் இல்லத்தில் பாவாணர் இருந்த நாட்களையும், பாவாணரும் நானும் பகுத்துப் பார்த்த பழந்தமிழ்ச் சொற்கள் சிலவற்றையும் எண்ணிப் பார்க்கும்போது இன்பம் பொங்குகிறது.

    ReplyDelete

Kindly post a comment.