Tuesday, January 29, 2013

சிதம்பரத்தில் நந்தன் கல்விக் கழகம் கண்ட துறவி சகஜானந்தா, 31 ஆண்டுகள் தமிழ்நாட்டில் ,மேலவை / சட்டசபை பதவி வகித்தவர் என்றால் நம்ப முடிகிறதா ?

Swamy Sagajanandha Adikalar.

சுவாமி A .S .சகஜானந்த அடிகளார் (1890 - 1959)

       சிதம்பரத்தில் 1916 ல் நந்தனார் கல்விக் கழகத்தை நிறுவியவர். தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்வுக்காக துறவறம் பூண்டு தன் வாழ்நாள் முழுதும் உழைத்தவர்
.
சிதம்பரத்தில் நந்தனார் திருப்பெயரில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே கல்விக்கூடங்கள் நிறுவியவர். அவர்களுக்காக உணவு வசதியுடன் தங்கி படிக்க விடுதிகளும் அமைத்துள்ளார்
.
காங்கிரஸ் கட்சியின் முலம் அரசியலில் ஈடுபட்ட அடிகளார் 1926 முதல் 1932 வரையிலும் சென்னை மாகாண சட்டபேரவை உறுப்பினராக இருந்தார். பின்னர் 1936 முதல் 1959 தன் இறுதி மூச்சு வரை சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கருடன் தொடர்பு வைத்திருந்த தமிழகத் தலைவர்களுள் அடிகளார் மிக முக்கியமானவராவார்.
இரட்டை வாக்குரிமை, வயது வந்தோர்க்கு வாக்களிக்கும் உரிமை ஆகிய அரசியல் கோரிக்கைகளை அம்பேத்கர் முன் வைத்த போது அதற்கு வலிமை சேர்க்கும் விதமாக போராடினார்.
தமிழ்நாட்டில் ஆதி திராவிட நலப் பள்ளிகள் உருவாக காரணமாகத் திகழ்ந்தார்.
தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
கப்பல் ஒட்டிய தமிழர் வ.உ .சிதம்பரம் பிள்ளையிடம் திருக்குறள் விளக்கம் பெற்றார். அவரைத் தன் ஞானத் தந்தை என்று அடிகளார் குறிபிடுகிறார்.


அடிகளார் தொண்டு பற்றி பெருந்தலைவர்கள் ...

I was delighted to come back to  this place(Nandanar Mutt) after many years                                                    

            -M.K.Gandhi 16.2.1934


Nandanar Ashramam and School being conducted under the guidance of swami saganandhar who had been working with a devotion and determination worthy of cause. It is Institutions like this which will ultimately solve the untouchability problem..

                       -Rajendra Prasad 9.11.1935

It is clear from Rajendra Babu's note above as well as others notes, that the school is in some way unique and is fulfilling an important function in the education and uplift of Harijans.... I wish it success.

                                     -Nehru 17.10.1936.  
தமிழ் நாட்டில் தாழ்த்தப் பட்ட மக்கள் சமுதாயத்திற்காக சுவாமி சகஜானந்தா அவர்கள் அரும் பெரும் தொண்டாற்றி இருக்கிறார்கள். இவருடைய தொண்டின் பயனாக அந்த சமுதாயம் எந்த விதமான எல்லையும் இல்லாமல் நல் வண்ணம் முன்னேறி இருக்கின்றது. பொதுவாக சொல்ல போனால் நம் நாட்டில் சகஜானந்தா அவர்களை போல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்குத் தொண்டாற்றியவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.-பெரியார் ஈ.வெ.ராமசாமி, 1969


சகஜானந்தா போட்டியிடும் வரை அவரது தொகுதியில் தி மு க போட்டியிடாது என முடிவெடுத்துள்ளது.- அண்ணாவின் செய்தி இந்த உயர்நிலைப் பள்ளி (நந்தனார்) நல்ல முறையில் சுவாமி சகஜனந்தம் அவர்கள் மேற்பார்வையில் நடந்துக் கொண்டு வருவதைக் கண்டு களிப்பு அடைகிறேன்.-காமராஜர்    
அடிகளாரின் நிறுவனங்கள் ....

ஓமகுளக்கரையில் சிவாலயம் ...ஆலயத்தின் உள்ளே சிவசக்தி சிலைகள்..பெருமாள்..

நந்தனார் சிற்பம் மற்றும் உற்சவமூர்த்தி...                              சுவாமி சகஜானந்தா அடிகளார் திருஉருவச்சிலை...


பெண்கள் மேல்நிலைப்பள்ளி

0 comments:

Post a Comment

Kindly post a comment.