Friday, December 28, 2012

செயற்கை மூளை வடிவமைப்பு- வாட்டர்லூ பல்கலைக்கழகம், கனடா !

 

Semantic 

Pointer 

Architecture

Unfied Network- 

SPAN-

( ஸ்பான் பின்
இன்ஸ்டால்டு...டாட்... )



ஓர் எந்திர அமைப்பு-
சிந்திக்கும், 
நினைவுபடுத்திக்கொள்ளும்,
கிட்டத்தட்ட அச்சு அசலாக
 மூளையைப் போலவே.

 கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின்

“ப்ரெய்ன் சைல்ட்” எனப்படும் ஸ்பான்தான் இதுவரை உருவாக்கப்பட்ட

இதேமாதிரி விர்ச்சுவல் மூளைகளின் உச்சம் என்று அறிவியலாளர்கள்

அதிசயிக்கிறார்கள்.  


‘மில்லியன் பிராசஸர்’ கம்ப்யூட்டர் மாதிரி ஏற்கனவே இதுபோன்ற சில முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.ஆனால், அவற்றின் செயல்பாடுகள் குறிப்பிட்ட அளவுக்குள் முடங்கிவிடும். மாறாக ஸ்பான் 2.5 லட்சம் நியூரான்களால் உருவாக்கப்பட்டு, கிட்டத்தட்ட மனித மூளையின் வடிவை ஒத்திருக்கிறது. இதனால், சூழலைப் புரிந்துகொண்டு மனிதனைப் போலவே சிந்திக்கவும், செயல்படவும் இதனால் முடியும். 

நியோ விஞ்ஞானிகளும், சாஃப்ட்வேர் பொறியாளர்களுமாக இணந்து ஸ்பானை உருவாக்கியிருக்கிறார்கள். இதனுடைய செயல்பாடுகளை 784 பிக்ஸல் அளவுள்ள டிஜிட்டல் கேமராவில் பார்க்கலாம். ஸ்பானுக்குள் உள்ளிடப்படும் தகவல்களை, அது பளிச்சென்று நினைவில் வைத்துக்கொள்ளும். எந்திரம் என்பதால், நமக்கிருக்கும் மறதிப் பிரச்னை அதற்கில்லை. இதன் மூலமாக அதன் ”ஐக்யூ” நம்மிலும் தலை சிறந்ததாக இருக்கும்.                                                                                                                                           

மனிதமூளை விசித்திரமானது. சுலபமாக வரையறுத்துவிட முடியாதது. மகிழ்ச்சி, சோகம்,காதல், வஞ்சகம், துரோகம், பாசம் என்றெல்லாம் நமக்கிருக்கும் உணர்வுகளை ஸ்பானுக்குள் உருவாக்க இன்னும் நிறைய காலம் தேவைப்படும். அதற்காக ஆராய்ச்சியாளர்கள் முன்னைக் காட்டிலும் தீவிரமாக வேலை பார்த்தாக வேண்டும்.

இப்போதைக்கு ஸ்பானை வைத்து சூப்பர் கம்ப்யூட்டர்களை முன்னிலும் சிறப்பான புத்திசாலித்தனத்தோடு இயங்கச் செய்ய முடியும். அதற்கு டிஜிட்டல் கண்ணைப் பொருத்தி, நம்மைப் போலவே காட்சிகளைப் பார்த்துக் கொள்ளச் செய்யலாம். ரோபோட்டிக்களை அமைத்து கடுமையான உழைப்பு தேவைப்படும் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இதெல்லாம் ஏற்கனவே சாத்தியம்தான் என்றாலும், ‘ஸ்பான்’ அதைக் காட்டிலும் புத்திசாலித்தனமாக, உருப்படியாக வேலைபார்க்கும்.

எதிர்காலத்தில் எந்தத் துறை ஸ்பானுடைய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறது என்பதை இப்போதே யூகிக்க முடியவில்லை.ஒருவேளை எதிர்காலத்தில் யாருக்காவது புத்திசாலித்தனமான மூளை தேவைப்பட்டால், ஸ்பானை மூளைமாற்று அறுவை சிகிச்சை மூலமாகக்கூட பொருத்திக் கொள்ளலாம்.

யார் கண்டது ? அறிவியலில் எது வேண்டுமானாலும் சாத்தியம்தான் !

நன்றி :- புதிய தலைமுறை, க.ஸ்ரீவித்யா, 03-01-2013








0 comments:

Post a Comment

Kindly post a comment.