Sunday, December 30, 2012

சிம்புட் பறவையைக் கோவில் சிற்பங்களிலேனும் கண்டவர் உண்டோ ?

 நன்றி :- தமிழ்விக்கிபீடியா-


 சிம்புட் பறவை


பொருள்
  • பழந்தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, எட்டுக்கால்கள் இருந்ததாகக் கூறப்படும் ஒரு வகைப் பறவை.

 

வாக்கியப் பயன்பாடு

சிம்புட்பறவையே! சிறகை விரி! எழு! -- பாரதிதாசன்.

 

ஒத்த சொற்கள்

வாருண்டம், அம்பரவாணம், சம்பரம், வருடை, துரோணம், சரபம் ஆகியன

எண்கால்புள் எனப் பிங்கல நிகண்டு கூறுகிறது.


 தாயுமானவர் பாடல்கள் :- 6.கணாகரக் கடவுள், 10-வது பாடல்


இங்கற்ற படியங்கு மெனவறியு நல்லறிஞர்
       எக்காலமும் உதவுவார்
   இன்சொல்தவ றார்பொய்மை யாமிழுக் குரையார்
       இரங்குவார் கொலைகள்பயிலார்
சங்கற்ப சித்தரவ ருள்ளக் கருத்திலுறை
       சாட்சிநீ யிகபரத்துஞ்
   சந்தான கற்பகத் தேவா யிருந்தே
       சமத்தஇன் பமும்உதவுவாய்
சிங்கத்தை யொத்தென்னைப் பாயவரு வினையினைச்
       சேதிக்க வருசிம்புளே
   சிந்தா குலத்திமிரம் அகலவரு பானுவே
       தீனனேன் கரையேறவே
கங்கற்ற பேராசை வெள்ளத்தின் வளரருட்
       ககனவட் டக்கப்பலே
   கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
      கருணா கரக்கடவுளே. 10.  

0 comments:

Post a Comment

Kindly post a comment.