Tuesday, December 18, 2012

நதி, நீர்நிலைகளைப் பாதுகாக்க சட்டம்: உம்மன் சாண்டி !


திருவனந்தபுரம், டிச.17: கேரளத்தில் நதி மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்க விரிவான சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

கேரள மாநில சட்டப் பேரவையில், நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்து, காங்கிரஸ் உறுப்பினர் டி.என்.பிரதாபன் பேசுகையில்,"" நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க நதிப் பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும்,'' என்று கேட்டுக்கொண்டார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர் உம்மன் சாண்டி,"" நதிகள் மற்றும் நீர் நிலைகளைப் பாதுகாக்க, ஒரு விரிவான சட்டம் கொண்டுவரப்படும். நதிகளைப் பாதுகாக்க அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைப்பது பற்றியும் ஆலோசிக்கப்படும்.

மாநிலத்தில் உள்ள 44 நதிகளில், பெரும்பாலானவற்றில், பல்வேறு காரணங்களால் தண்ணீர் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. முக்கியமாக, கட்டுப்பாடற்ற மணல் குவாரிகளால் நதிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,'' என்று தெரிவித்தார்.                                                                                                                         
நன்ரி :- தினமணி, 18-12-2012                                                                                                               




0 comments:

Post a Comment

Kindly post a comment.