Thursday, December 6, 2012

உலகத் தமிழ் இணைய மாநாடு,டிசம்பர், 28, 29, 30-12-2012!


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக உயராய்வு மன்றமும் உத்தமம் என்ற குறியீட்டுப் பெயர் பூண்ட உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் இணைந்து தமிழ் இணைய மாநாட்டை நடத்தவுள்ளன. டிசம்பர் 2012ல் இந்த மாநாடு நடக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உத்தமம் நிறுவனம் ஏற்கனவே ஏழு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் முன்னணி நிலைப் பல்கலைக் கழகங்களோடு இணைந்து நடத்தியுள்ளது. இன்னும் மூன்று மாநாடுகளைத் தமிழக மாநில அரசின் ஆதரவோடு நடத்தியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எதிர்வரும் டிசம்பரில் நடக்கவிருக்கும் மாநாடு உத்தமம் நிறுவனத்தின் பதினொராவது மாநாடாகும். தமிழ் தொடர்பான கணினி சார்ந்த மொழியியல் ஆராய்சிகளை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கடந்த பல வருடங்களாக நடத்திவருவது உலகறிந்த விடயம்.

உத்தமம் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்மொழி மேம்பாட்டையும் கணினித் தமிழ் வளர்ச்சியையும் குறிக்கோள்களாக உத்தமம் கொண்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் அதே நோக்குடன் இயங்குவதால் எதிர்வரும் மாநாடு மிகச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2012 டிசம்பர் 28,29,30ம் நாட்களில் உலகத் தமிழ் இணைய மாநாடு அண்ணாமலைப் பல்கலைக் கழக மன்றத்தில் நடக்க ஏற்பாடாகியுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல் பேராசிரியர் மா.கணேசன் மாநாட்டு உள்ளுர் குழுவுக்குத் தலைமை தாங்குவார்.

உத்தமம் அமைப்பின் துணைத் தலைவர் இளந்தமிழ் மாநாட்டுப் பன்னாட்டுக் குழுவுக்குத் தலைமை தாங்குவார். இந்த மாநாடு கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்ற மும்முனைகளில் செயற்படும். மேலதிக தகவல்களை
 ti 2012@infitti.org என்ற மின் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.