Sunday, November 18, 2012

நவாப் இராஜமாணிக்கத்திற்கு ”சுதந்திர நாடகமணி” பட்டம் வழங்கிய உண்மை நிகழ்வு !



நவாப் இராஜமாணிக்கம் இளவயதுப் படம்


1947 ஆகஸ்ட் 15-ம் தேதி, ஆட்சி மாற்றம் நடக்கும் நேரத்தில் இரவு 12 மணிக்கு, தூத்துக்குடி பாலகிருஷ்ணா தியேட்டரில் "தசாவதாரம்' நாடகம் நடந்து கொண்டிருந்தது.

நாடகத்திற்கு இடையில் இந்திய தேசப்படம் போன்ற செட் அமைத்து அதன் நடுவில் அன்னை பாரதமாதா கறுப்பு உடை அணிந்து தலைவிரி கோலத்தோடு கை கால்களில் விலங்கு மாட்டப்பட்டு நிற்கின்றார்.

 ஆட்சி மாற்றம் நிகழ்ந்து  இந்தியா விடுதலை பெறும் நேரத்தில் ஆலயமணிகள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க வெற்றிச் சங்கு ஊத, அன்னையின் விலங்கு அறுந்து விழுகின்றன.  பாரதமாதா அணிந்திருந்த கறுப்பு உடைகள் மாறி பளபளவென்று பட்டாடை மின்ன, தலையில் கிரீடம் கையில் ராட்டை, தேசியக்கொடி முதலியவற்றுடன் பாரத அன்னை காட்சி
தருகின்றார்., தேசியத் தலைவர்கள் அத்தனை பேரும் தாயை வணங்கி வெற்றி  வெற்றி என்று  கோஷம் முழங்குகின்றனர்.

இத்தகைய  அற்புதக் காட்சியைத்  தசாவதாரம் நாடகத்திற்கிடையே இரவு 12 மணிக்குக் காட்டி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டார் நவாப் இராஜமாணிக்கம்.

இது நாடகத்தின் மத்தியில் தொடர்ந்து 10 நாள்கள் காட்டி வெற்றி விழாவாகக் கொண்டாட தூத்துக்குடி மக்கள், பிரமுகர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து

நவாப் ராஜமாணிக்கத்திற்கு "சுதந்திர நாடக மணி' என்ற பட்டத்தை வழங்கி அவரைப் பெருமைப்படுத்தினார்கள்.

நாடகமும் சினிமாவும் என்ற நூலில் ஏ.எல்.எஸ். வீரப்பா.

தகவல் உதவி :- தினமணி கதிர், 18-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.