நாற்பது வயதை நெருங்கிவிட்டாலே நாம் அழைக்காமல் வந்துவிடுகிறது மூட்டு வலி. இருபத்தைந்து வயது இளைஞனும் அதிக நேரம் கணினி முன் அமர்வதால் சொல்வது கழுத்து வலி. இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதால், பலருக்கு முதுகு வலி.
இப்படி நம் வாழ்நாளில் பாதியை வலியால் கழிக்கிறோமே...இந்த வலியென்பது வரமா அல்லது சாபமா? வலி என்பது ஒரு நோயின் அறிகுறி. வலி வருவதும் நல்லதற்கே, இல்லையேல் நமக்கு வரும் நோயை நாம் அறிய முடியாது என்று சொல்கிறது பிரமிப்பூட்டும் 120 வருட பாரம்பரியம் கொண்ட வலி நிவாரணத்துக்கு தலை சிறந்த அமிர்தாஞ்சன் நிறுவனம்.
உச்சி முதல் பாதம் வரை வலி உண்டாக்கக்கூடிய அனைத்து நோய்களையும் சவால் கொள்ள தி.நகரில் உருவானதுதான் "அமிர்தாஞ்சன் - கேர் ஸ்பெஷலைஸ்டு சென்ட்டர்'. இந்த சிறப்பு மையத்தில் வலி நிவாரண மருத்துவர்-முடநீக்கியல் மருத்துவர்-மறுவாழ்வு சிகிச்சை நிபுணர்-நரம்பியல் நிபுணர்-ஃபிஸியோதெரப்பிஸ்ட் என அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றனர்.
இந்தியாவில் எத்தனையோ சிறப்பு மருத்துவமனைகள் இருக்க, வலி என்பதற்கென்றே ஒன்று தேவையா என்றால், தேவைதான். வலி என்ற துன்பம் உடலை மட்டுமல்லாது மனதையும் பாதிக்கிறது. இத்தகைய வலியிலிருந்து விடுவித்து நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இந்த அமிர்தாஞ்சன் கேர் - வலி நிவாரண மருத்துவமனையின் சிறப்பு அம்சமாகும்.
சிறப்பு அம்சங்கள்: சிறப்பு பரிசோதனைகளாக எக்ஸ்ரே, சி.டி., எம்.ஆர்.ஐ. மூலம் தெரிந்து கொள்ள முடியாத மூட்டு வலிப் பிரச்னைகளை உரிய சிறப்புப் பரிசோதனைகள் மூலம் இந்த மையத்தின் சிறப்பு நிபுணர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பதால் வலியிலிருந்து நோயாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது.
முதுகுவலியால் வேதனையா? சாதாரண தசைப் பிடிப்பு முதல் புற்று நோய் வரை எந்த நோயால் முதுகுவலி ஏற்பட்டாலும், அமிர்தாஞ்சன் சிறப்பு மையத்தில் நிவாரணம் கிடைக்கும். சிகிச்சை பெற்ற அன்றே வேலைக்குச் செல்ல முடியும் என்பது இந்த சிறப்பு மையத்தின் சிறப்பு அம்சமாகும். இதே போன்று "ஆர்த்தரைட்டிஸ்' எனப்படும் எலும்பு மூட்டு நோய் காரணமாக பாதிக்கப்படுவோருக்கு இந்த மையத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள் நல்ல நிவாரணத்தைத் தருகின்றன. புற்று நோயாளிகளின் ஆயுள் காலம் குறைவு என்றாலும்கூட, வலியற்ற தரமான வாழ்க்கை வாழ்வதற்கு உரிய "கீமோதெரப்பி' மற்றும் "ரேடியோ ஃப்ரீகுவன்ஸி நியூரோலைஸிஸ்' சிகிச்சைகள் இந்த மையத்தில் அளிக்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு...
அமிர்தாஞ்சன் வலி நிவாரண
தி.நகர், சென்னை.
மேற்படித் தகவலைத் தருவது, தினமணி, 12-11-2012
Monday, November 12, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.