Thursday, November 29, 2012

அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி: டிச.3-ந்தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு !


இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை தமிழ்நாட்டில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. சமீபத்தில் வந்த நீலம் புயல் காரணமாக ஓரளவு மழை பெய்தது. என்றாலும் தமிழ்நாட்டில் உள்ள எந்த அணையும் நிரம்பவில்லை.

கடந்த வாரம் இலங்கை அருகே உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாலும் போதிய மழை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்தமான் அருகே புதிய  காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று கூறியதாவது:-

வங்கக் கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி புதிதாக உருவாகி உள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக டிசம்பர் 3-ந்தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.                                                                                                                             

நன்றி :-மாலைமலர், 29-11-2012                                                                                                     



 

0 comments:

Post a Comment

Kindly post a comment.