Tuesday, November 27, 2012

252 சிறுவர்களைக் கற்பழித்த வழக்கு: இலங்கையில் தஞ்சமடைந்த ஆஸ்திரேலியக் குற்றவாளி !



கொழும்பு: ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திக் கொடுமைக்குள்ளாக்கிய பாதிரியார் பெர்னார்ட் மெக்கிரத் என்பவர் இலங்கையில் தஞ்சமடைந்திருக்கிறார்.

வழக்கு என்ன?

1970கள் மற்றும் 1980களில் ஆஸ்திரேலியாவில் தேவாலயம் ஒன்றில் பணிசெய்த நியூசிலாந்தைச் சேர்ந்த மெக்கிரத், நூற்றுக்கணக்கான சிறுவர்களுடன் வலுக்கட்டாயமாகப் பாலுறவு கொண்டார் என்பது குற்றச்சாட்டு.

இவர் மீது மொத்தம் 252 செக்ஸ் புகார்கள் உள்ளன. இவரது "வேட்டையே" 7 வயது முதல் 15 வயது சிறுவர்கள்தான்! இவர் மீதான வழக்கில் 2006-ம் ஆண்டு 22 குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கு முடியும் முன்பே சொந்த நாடான நியூசிலாந்து எஸ்கேப்பாகிவிட்டார். அவரை இண்டர்போல் உதவியுடன் நாடு கடத்துவதற்கான முயற்சிகளை ஆஸ்திரேலியா மேற்கொண்டது.

கடந்த 15-ந் தேதி இண்டர்போல் இதற்கான அறிவிப்பை நியூசிலாந்திடம் கொடுத்தது. ஆனால் அவர் நியூசிலாந்தில் இல்லை என்றும் இலங்கைக்குச் சென்றுவிட்டார் என்றும் அந்நாட்டின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தங்களது நாட்டில் மெக்கிரத் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படாததால் அவர் இலங்கைக்குப் போய்விட்டார் என்று கூற ஆஸ்திரேலியா அதிர்ச்சியில் கிடக்கிறது!

இலங்கையின் குடிமக்களோ அந்நாட்டு அரசிடமிருந்து தப்பித்து ஆஸ்திரேலியாவில் குடியேறுகின்றனர்! ஆனால் ஆஸ்திரேலியாவில் தேடப்படுகிற குற்றவாளியோ இலங்கையில் போய்ப் பதுங்கிக் கொண்டிருப்பதை எப்படிச் சொல்ல? என்கின்றனர் ஆஸ்திரேலியக் குடியேற்றத் துறை அதிகாரிகள்!                                                                               

நன்றி :- ஒன் இந்தியா, 27-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.