Sunday, September 23, 2012

தில்லித் தமிழ்ச்சங்கம் - அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாடு 2012 - ஒரு பார்வை




 ”அதிசயங்கள் அவ்வப்பொழுது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன “ என்ற வாக்கிற்குச் சொந்தக்காரர், தமிழுலகம் மறக்க முடியாத, பன்முகத் திறனாளி, வல்லிக்கண்ணன்.



ஆம் ! சென்ற 15, 16 தேதிகளில் புது தில்லித் தமிழ்ச் சங்கம் நடத்திய, அகில இந்திய தமிழ் இலக்கிய அமைப்புக்களின் மாநாட்டில் நாம் பங்கு பெற்ற நிகழ்வும் அப்படித்தான் அமைந்தது. பார்வையாளராகச் சென்றதோடு மட்டுமன்றிப் பேசுவதற்கு வாய்ப்பும் கிடைக்கப்பெற்றது அதிசயம்தானே! 

  "புதுதில்லித் தமிழ்ச் சங்கத் திறன்மிகு மேலாண்மைத் தமிழன்பர்களைப் போன்றோரும், மூதறிஞர் தமிழண்ணல் போன்றோரும்,, கணினித் தமிழ் வளர்க்கும் துணைவேந்தர் பொன்னவைக்கோ போன்றோரும் ஊர்தோறும் இருந்திட்டால் தமிழ் வளர்ந்தோங்குவது திண்ணம்.

புதுதில்லித் தமிழ்ச்சங்கம் கூகிள் குழுமம் ஒன்றைத் துவக்க வேண்டும். அதில் இந்தியத் தமிழ் இலக்கிய அமைப்புக்களின் நிகழ்வுகள் கட்டாயம் இடம்பெற வேண்டும். அவர்களது மாத இதழ், சஙகச் சுடர் இணைய இதழாக்கப்படல் வேண்டும்.. .தற்போதைய இணையத்தில் படமும், செய்திகளும் படங்களாகவே ( ஸ்கேன் செய்து ) உள்ளன. செய்திகள் தட்டச்சு செய்து இடம்பெறவேண்டும். அப்பொழுதுதான், கூகிள் தேடுபொறி மூலமாகவும் புதுதில்லித் தமிழ்ச் சங்கச் செயல்பாடுகள் உலகமெங்கும் பரவிட வழி கிடைக்கும்.

இம்முயற்சிக்குத் துணைநிற்க வின்மணியுடன் துணை நிற்போம் " என உரைநிகழ்த்தி விடைபெற்றோம்.

இத்தனைக்கும் காரணமாயிருந்த எல்லாம்வல்ல இறைவன் கருணைத் திறத்திற்குத் தலைவணங்குகிறோம்.



2 comments:

  1. வாழ்த்துக்கள் ஐயா ,

    மேன் மேலும் பல விருதுகள் பெற வேண்டும். அரிய பல விடயங்களை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தாங்கள் அளிக்க வேண்டும்.

    - என்றும் அன்புடன்,
    வின்மணி

    ReplyDelete
    Replies
    1. அன்பார்ந்த நண்பருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

      Delete

Kindly post a comment.