Monday, August 27, 2012

கற்காலத்திற்குத் திரும்பிக்கொண்டிருக்கும் ஆத்மாக்கள்!



ஆப்கானிஸ்தான் நாட்டின் தென் பகுதியில் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள சமிண்தாவர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இசை நிகழ்ச்சி நடத்தினர். அங்கு விழாக்காலங்களில் ஆதிவாசி பழங்குடியின பெண்கள் நடனமாடுவது வழக்கமான ஒன்று. எனவே இந்த நிகழ்ச்சியில் இரண்டு பெண்கள் நடனம் ஆட மற்றவர்கள் இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்த கிராமத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களைப் பிடித்து தலைகளை வெட்டினர். இதில் 2 பெண்கள் உள்பட 17 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

நாட்டில் சர்வாதிகார ஆட்சி செய்த தலிபான்களின் செயலாகத்தான் இது இருக்கும் என்று அப்பகுதி அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதற்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

ஆப்கான் மற்றும் நேட்டோ படைகளுக்கு தகவல்கள் கொடுப்பதாக சந்தேகப்படுகிறவர்களை தாலிபான்கள் பிடித்து இதுபோன்று சிரச்சேதம் செய்வது அவ்வப்போது நடந்து வருகிறது என்று அப்பகுதி முதியவர் ஒருவர் தெரிவித்தார்.

1996 முதல் 2001  வரை ஆப்கானை ஆண்டுவந்த தாலிபான் முஸ்லிம் தீவிரவாதிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் குழுக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்பவர்களைத் தூக்கிலிடுவது அல்லது தண்டிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். நன்றி ;-மாலை முரசு

0 comments:

Post a Comment

Kindly post a comment.