Wednesday, August 1, 2012

ம.பொ.சி., ஜீவா, அண்ணா, மற்றும் சில செய்திகள்-தினமணி கொண்டாட்டம்


வெகுகாலத்திற்கு முன் ஒரு சந்தர்ப்பத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர் மன்றத்தின் சார்பில் மூன்று பிரபல பேச்சாளர்களை ஒரே மேடையில் பேச வைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சி.என் அண்ணாதுரை (திமுக), ம.பொ.சிவஞானம் (தமிழரசு கழகம்), ஜீவானந்தம் (கம்யூனிஸ்ட்) ஆகிய மூவரையும் பேச அழைத்து அவர்களின் ஒப்புதலும் பெற்றனர். மாணவர் மன்றத்தினர், அம்மூவரிடமும் ஒரு பணிவான வேண்டுகோளையும் வைத்தனர். அவர்கள் அரசியல் கலப்பில்லாமல் பேச வேண்டும் என்பதுதான் அந்த வேண்டுகோள். மூவரும் அதை ஏற்றுக் கொண்டு பேசினர். மூன்று பேரின் பேச்சும் அற்புதம். மாணவர் உலகம் அன்று காது பெற்ற பயனை முழுக்க முழுக்க அனுபவதித்தது. அரசியல் 
நெடிகூட அம்மூவரின் பேச்சுகளில் வீசவில்லை.
("இசையும் இலக்கியமும்' எனும் நூலில் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் எழுதியது)புததக அலமாரியிலும் உள்ளே போக முடியாத அளவுக்கு ஒரு மிகப் பெரிய புத்தகம் ஒன்று என்னிடம் 
இருக்கிறது.

புத்தகத்தின் நீளம் 20 அங்குலம் (1 3/4 அடி), 14 1/2 அங்குலம் அகலம். 1 1/4 அங்குலம் உயரம். ஏறத்தாழ 4 1/2 கிலோ எடையுள்ள புத்தகம் என்னிடம் இருக்கிறது. அதன் விலை என்னவோ ரூ.570/- தான். ஆனால் இப்புத்தகம் எளிதில் கிடைக்காது.

புத்தகத் தலைப்பு, "இன்டியாஸ் ஸ்ட்ரகிள் ஃபார் இன்டிபென்டன்ஸ்- விஷூவல்ஸ் & டாக்குமென்டரி'.
அதாவது,"இந்திய விடுதலைப் போராட்டம்- படங்களும் ஆவணங்களும்' மத்திய அரசின் அமைப்பான என்.சி.இ.ஆர்.டி.- நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜூகேஷனல்ஸ் ரிசர்ச் & டிரெய்னிங் வெளியிட்ட புத்தகம் இது.

இந்நூல் வெளியிடப்பட்ட ஆண்டு 1986. காகிதம் அந்தக் கனத்தை தாங்காது என்பதால் காகிதத் துணியால் பைண்ட் செய்யப்பட்டது இந்நூல்.''


கதை சொல்லும் நானம்மா!

First Published : 29 Jul 2012 12:29:00 PM IST

லவ-குசர் என்ற இரட்டையர் ராமபிரானின் குழந்தைகளா, இல்லை வால்மீகியின் கற்பனைப் பாத்திரங்களா?


பர்பாக் யார்? பீமனின் மகன் கடோத்கஜனின் மகன். அவனுக்கு மட்டும் மகாபாரதப் போர் முழுதையும் மலை உச்சியில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? அதன் பின்னணிக் கதை என்ன?
- என்று அத்தனை கதைகளையும் "நானம்மா' ஜெயா வேணுகோபால் சுவாரசியமாகச் சொல்வதைக் கேட்க வேண்டுமா? மிகவும் எளிது. நீங்கள் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து, www.nanamma.co என்று வலைத் தளத்தில் தட்டினால், விலை மதிப்பற்ற இந்திய பாரம்பரியக் கதைகளைப் படத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம்.


"கதை சொல்லு பாட்டி, கதை சொல்லு..' என்று இரவில் பாடாய்ப் படுத்தும்
சின்னஞ்சிறு குழந்தைகளிடம், இனி சாக்குப் போக்குச் சொல்லாமல் சமாளிக்கலாம்.
மொத்தம் 1008 கதைகள். எல்லாமே ல்க்ச் வகை. அதில் 365 வீடியோ வடிவத்தில் பார்க்கலாம், கேட்கலாம். கேட்டுக்கொண்டே தூக்கம் வந்தால் தூங்கலாம் "என்ன கணக்கு 1008 கதைகள்?' என்று கேட்கிறவர்களுக்குக் கணக்குச் சொல்லியாக வேண்டும். இதோ கணக்கு. கூட்டல் போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்:


ஆன்மிகக் கதைகள்: 622
சரித்திர வகைக் கதைகள்: 210
கலாசார வகைக் கதைகள்:176


ஆன்மிகக் கதைகளில் புராண, இதிகாசங்கள் அடங்கும். விஷ்ணு, சிவன், பிரம்மா என்று கடவுள் பாத்திரங்கள் வருவார்கள். கிருஷ்ணரைப் பற்றிய கதைகள், ராமாயண, மகாபாரதப் பாத்திரங்களையும் பார்க்கலாம். படங்கள் உண்டு. பார்க்கவும் கேட்கவும் சுவாரசியமாக இருக்கும். சரித்திர வகைக் கதைகளில் சந்திரகுப்த மௌரியர், சாணக்கியர், பிந்துசாரர், அசோகர் என்று பல மன்னர்கள், சக்ரவர்த்திகள்.


கலாசார வகைக் கதைகளில், பண்டிகைகள், திருவிழாக்கள், சடங்குகள், பூஜைகள் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. விரும்பியதை "க்ளிக்' செய்து பார்க்கலாம். நானம்மா சொல்லும் கதையைக் கேட்கலாம். எல்லாமே மூன்று முதல் பத்து நிமிடங்கள்தாம். பல ஒரு பக்கக் கதைகள். பர்பாக் கதை மட்டும்தான் பதிமூன்று நிமிடங்கள். கலாசார வகைக் கதைகளில், உட்கார்ந்த இடத்திலிருந்தே புனிதத் தலங்களைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம். புஷ்கர் எங்கே இருக்கிறது அங்கு என்ன விசேஷம்? ஏழு மோட்ச தலங்கள் என்னென்ன? எல்லாமே சொல்லுவார் நானம்மா.


இன்னொரு வலைத்தளத்தையும் உருவாக்கி, இலவசமாகத் தந்திருக்கிறார் ஜெயா வேணுகோபால். அதுதான் ஸ்ரீர்ழ்ல்ர்ழ்ஹற்ங்ள்ந்ண்ப்ப்ள்.ஸ்ரீர்ம் நிர்வாக இயலில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், சிக்கல்கள், படிப்படியாக உயர்வது எப்படி, போன்ற சுய முன்னேற்ற உத்திகள் இதில் உள்ளன. உங்கள் கணினியில் இவற்றை நீங்கள் எல்லோரும் பார்த்து பயனடைய வேண்டும் என்பதற்காகவே கல்வித்துறையிலும், நிர்வாக இயலிலும் டாக்டரேட் பட்டங்கள் பெற்ற ஜெயா வேணுகோபால் தருவதை இலவசமாக வலைத் தளத்தில் பதிவிறக்கிக்கொள்ளலாம். ஆனால், மறக்காமல் நானம்மாவுக்கு ஒரு நன்றி சொல்லுங்கள்! 


ஒள்ரங்கசீப்பின் உயில்
40 வயதில் அரியணை ஏறிய மன்னர் அவுரங்க சீப் 51 ஆண்டு காலம் ஆட்சி புரிந்தார். தமது 91-வது வயதில் காலமானார். 

அவர் எழுதி வைத்திருந்த உயில், "என் கைகளால் தைக்கப்பட்ட குல்லாய்களை விற்ற பணம் 4 ரூபாய் 2 அணா. தலையணைக்கடியில் இருக்கிறது.

உடலைப் போர்த்துவதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துங்கள். புனித குர்ஆனிலிருந்து நான் எடுத்துக் கொடுத்த  நகல்களுக்காகக் கிடைத்த ஊதியம் ரூ. 350 என் கைப்பையில் உள்ளது.

அதை நான் இறந்த அன்று ஏழைகளுக்கு கொடுத்து உதவுங்கள். என் கல்லறை அழகோ ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் எளிமையாக மண்ணால் மூடப்பட வேண்டும்.

ஊர்வலமோ இசை போன்றவையோ எதுவும் கூடாது. கல்லறையில் பசுமையாக செடிகள் வளரட்டும்' என்று எழுதியிருந்தார்.


 நன்றி :- தினமணி ஞாயிறு கொண்டாட்டம்  29-07-2012


0 comments:

Post a Comment

Kindly post a comment.