Friday, August 31, 2012

5 ஆண்கள்+ ஒரு பெண் + டி.என்.ஏ.விளக்கங்கள் = உயிர் மொழி தமிழ்த்திரைப்படம் !


இயக்குனர் ராஜா கூறும்போது, ‘மரபணு ஆராய்ச்சிப்படி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஓமேகா என்ற 5 வகைகள்தான் உள்ளது. எந்த ஒரு மனிதனும் இந்த 5 வகையில் ஒருவராகத்தான் இருக்க முடியும். இந்த 5 குணாதிசயங்கள் கொண்டவர்களின் வாழ்க்கையில் பார்வையற்ற பெண் கடந்து செல்வதுதான் கதை. பனிக்காலம், கற்காலம், அரசர்கள் காலம், நிகழ்காலம் என்ற நான்கு காலகட்டங்களில் கதை நடக்கிறது' என்கிறார்  - உதவி தினகரன் சினிமா.

வெற்றியைத்தன் பெயரிலேயே கொண்டுள்ல விஜய், அணைத்துள்ளவர்தான், உயிர்மொழியின் ஜீவநாடி.

http://en.wikipedia.org/wiki/DNA_(disambiguation)

DNA is a nucleic acid that contains the genetic instructions specifying the biological development of all cellular life.


ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமேகா ஆகிய ஐந்து வகை டி.என்.ஏ.-க்கள் அடங்கியதே மனித இனம். இவர்கள் முறையே,

1)  சுயநலமின்மை,

2)  தன் நலம்- தன் குடும்பம் என்று யோசிப்பவன்,  3)கலக்கம்-குழப்பம்-தயக்கம்-
 
    கூச்சம்-தெளிவில்லாத்தன்மை,

4)  உள்ளொன்று வைத்துப்புறம்பொன்று வாழும் நிழல் மனிதம்,

5)  எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் நிகழ்வதை அப்படியே ஏற்றுக்

   கொள்ளும் தன்மையன்

இவ்வைகையில் பார்க்கப்போனால் உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரையும் ஐந்து வகையாகப் பிரித்து விடலாம். ஆனால், காலமும் , சூழ்நிலையும் மனிதனைப் பாடாய்ப் படுத்துகின்றது.

பெண்கள் பருவமடைந்துவிட்டால் பிற ஆண்களையே பார்க்கவே கூடாது என்றிருந்தது ஒரு காலம். அப்படிப்பட்ட காலத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களே கிடையாது என்றே சொல்லலாம். பின்னர் பெண்கள் ஆசிரியைப் பணியாற்றலாம் என்று சமூகம் ஏற்றுக்கொண்டது. இது படிபடியாகப் பரவி எல்லா வேலைகளுக்கும் செல்லலாம் என்ற நிலைக்கு மாறுதல்கள் வந்தன. தற்பொழுது பெண்கள் இல்லாத துறையே இல்லை என்று சொல்லிவிடலாம்.

கைநிறையச் சம்பளம், வாராந்திரக் கொண்டாட்டங்கள், ஆணோ-பெண்ணோ எப்பொழுது வீடு திரும்பினாலும், எப்படித் திரும்பினாலும் ஏற்றுக்கொள்ளும் கலாச்சாரமுள்ள சமூகமாகவும்  உருமாறி வருகின்றது..

இந்தச் சூழலில் டி.என்.ஏ.- என்றால் என்ன ? அதன் உள்ளடக்கம் என்ன? அவற்றின் செயல்பாடுகள் எத்தகையன? என்பனவற்றை மிகமிகத் தெளிவாகவும், விரிவாகவும் உயிரிமொழி என்ற திரைப்படத்தின் மூலம் எடுத்துக் காட்டி இருக்கின்றார் ராஜா. கதை, வசனம், இயக்கம் எல்லாவற்றையுமே தானே ஏற்றுக்கொண்டுள்ளார்.


ஒருவருக்கொருவர் தொடர்பே இல்லாத ஐந்து ஆண்கள். ஒரு பெண். ஆனால் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் அந்தப்பெண்ணைக் காதலிக்கின்றனர். அந்தப் பெண் யாரைக் காதலிக்கின்றாள்? ஐந்து பேருடைய செயல்பாடுகள் என்ன ? அவர்களுக்குள் இருக்கும் ஐவகை டி.என்.ஏ.-க்கள் ஐவரையும் என்ன பாடு படுத்துகின்றன? இதுதான் கதை நவரசங்களும் உண்டு. காதலுடன் பின்னப்பட்டுள்ள டி.என்.ஏ.சமாச்சாரம் தமிழுக்குப் புதுசு.

மதுரைக்காரர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள். கனடாவில் இருக்கும் மதுரையச் சேர்ந்த ஜெயபாரதன், அணுவியல், அறிவியல், தமிழ்க் கவிதைகள் என்று இணையத்தில், வலைப்பூக்களில் தமிழில் சுவைபட எழுதி வருகின்றார். அவரது வயது 80-க்கும் மேலே என்றால் எல்லோருக்கும் வியப்பாய் இருக்கும். ஐயம் இருப்போர் சென்று காண வேண்டிய வலைத்தளம். jayabharathan.wordpress.com.

அதேபோன்று அதே மதுரையில் அமெரிக்கன் கல்லூரியில் பயின்றவர் ராஜா. பல விளம்பரப்பட நிறுவனங்களில் கிரியேட்டிவ் டைரக்டராகப் பணியாற்றிய அனுபவங்களும் உண்டு. வலுவான திரைக்கதை அமைப்பையும், தன் திறமையையும் மட்டுமே நம்பிப் படத்தில் புது முகங்களையே நடிக்க வைத்திருக்கின்றார்.  படத் தயாரிப்பாளர் சண்முகப்பிரியா.

மேலும், “ சொல்வது தெளிந்து சொல்” என்ற பாரதியின் வழித்தடம் பற்றியுள்ள இயக்குநர் ராஜாவின் உயிர்மொழி உயிர்த் துடிப்புள்ள மொழியாகவே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சினிமாத் தகவல்கள் உதவி :-தீக்கதிர்

மேலும் விபரம் வேண்டுவோர் கீழ்க்காணும் இணைய தளத்திற்கும் செல்லலாம்.

http://www.sanfordburnham.org/research/yourhealth/Pages/improvehumanhealth.aspx?gclid=CL-dzcCukbICFYka6wod2DoAww

How Does Basic Research Improve Human Health


0 comments:

Post a Comment

Kindly post a comment.