Thursday, July 19, 2012

கோவையிலிருந்து வெளிவரும்மாத இதழ் ” தமிழர் எழுச்சி ”

   


தமிழர் எழுச்சி

மாத இதழ்


ஆசிரியர் :-     முருகு இராசாங்கம்   94435 24166


துணை ஆசிரியர்;-கவிஞர் ஆரூரான்,


                                        குறள் முருகன்                 
                                                                                                      


சட்ட    ஆலோசகர்- வழக்கறிஞர்    சி.முருகேசன்


வேண்டுகோள் -விமுனா மூர்த்தி

அன்பு சகோதரி

மம்தா பானர்ஜி

உழைப்பால் மட்டுமே

உயரத்துக்கு வந்தவள்  நீ:

மாற்றத்தை விரும்பிப்

பதவி தந்தவர்கள்

ஏமாற்றத்தைச் சந்திக்கலாமா?

கேலிச் சித்திரங்கள் எல்லாமே

போலிச் சித்திரங்கள் அல்ல:

எச்சரிக்கை விளக்குகளைக்

கொச்சைப் படுத்தக் கூடாது:

பயணிக்கும் பாதையின்

பள்ளம் மேடுகளை

மின்னல்களும் வெளிப்படுத்தும்!

செய்தக்க செய்தால் மட்டுமே

மக்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள்:

பொய்யுரைகள் எதையும்

பொருட்படுத்துவதே இல்லை:

மக்களே எஜமானர்கள் என்று

மார்க்ஸ் சொன்னது

உனக்கேன் தெரியாமல்  போனது ?

சுத்தியலும் அரிவாளும்

சில சுயநலக் கைகளிலே

செங்கொடியாய்ப் பறப்பதாலே

தத்துவத்தின் ஆசானைத்

தடை செய்ய நினைக்கலாமா?

ஓர் அன்பான வேண்டுகோள்!

மக்களை மேம்படுத்தும் நல்லாட்சிக்கு

காந்தியின் ஊன்றுகோல் மட்டுமல்ல

மார்க்ஸின் தூண்டுகோலும் தேவை! -----விமுனா மூர்த்தி.


மேற்படி இதழில் இடம்பெற்றுள்ள கவிதைதான் இது!

தமிழ்த் தேசியம், பெண்ணியம், எளிய அறிவியல், அரசியல், சமூகம், 


பொருளாதாரம் பற்றிய கட்டுரைகள், கவிதைகள் வரவேற்கப்படுகின்றன. 


பக்கங்கள் 32 என்பதால் காதல் கவிதைகள், இயற்கைக் கவிதைகள், 


கதைகள் வெளியிட இயலாது. என்ற அறிவிப்பு - நகைப்பைத் 


தருகின்றது.சொல்லாமலேயே நடைமுறைப்படுத்தியிருக்கலாம். 


காதலையும், இயற்கையும் மானுடம் புறக்கணிக்க முடியுமா?

இந்தியா சோஷலிச நாடாக மாறினாலோ, தமிழ்நாடு தனிநாடாக 


ஆனாலோ, (பெட்ரோல்) இதற்காகப் பொதுமக்கள் எழுச்சி கொண்டு 


அடாவடி அரசியல்வாதிகளையும் பெரு முதலாளிகளையும் 


ஒழித்தாலோதான் நாடு உருப்படும். பெட்ரோல் விலை குறையும். என்ற 


வரிகள் இதழின் குழப்பத்தைத் தெரிவிக்கின்றது.

தமிழர் நாடு எனும் பெயரை இந்திய அரசு மறுத்து விட்டதால், தமிழர் நாடு 


இதழ் அங்கீகாரத்துடன், தமிழர் எழுச்சி என்ற பெயரில் தொடர்ந்து 


வெளிவரும் என்ற அறிவிப்பிலும் குழப்பமே வெளிப்படுகின்றது.

ஆசிரியர் உரை இவ்வளவு விரிவாகவும் குழப்பமாகவும் 


வேண்டியதில்லை.

சி.பா.ஆதித்தனாரை சபாநாயகர் பதவியில் அமர்த்திவிட்டு , தினத்தந்தியை 


தி.மு.க..வின் இலவச கொள்கை பரப்பிதழாக்கிக்  கொண்ட 


சாமர்த்தியத்தை வெளிக் கொணருங்கள்.

தன் கொள்கையைக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தபோதும், இராஜாஜியைச் 


சரிக்கட்டி சென்னையை இழந்துவிடாத,  ம.பொ.சியின் திறமையை 


வெளிப்படுத்துங்கள்.

படித்தவர் விடுத்தவை ஆறுதலைத் தருகின்றன.. கபிலரின் 


தமிழாற்றலைச் சொல்லுங்கள். இன்னும் பார்ப்பனீயக் கதைகள் எல்லாம் 


வேண்டாம்.

ஆண்டுதோறும், தமிழர் மூவர், முத்துத் தாண்டவர், அருணாசலக் 


கவிராயர், மாரிமுத்தாபிள்ளை ஆகிய சங்கீத மும்மூர்த்திகளின் தமிழிசை 


தமிழகம் முழுவதும் முழங்கச் செய்யுங்கள்.இன்னிசையிலிருந்து 


தொடங்கட்டும் உங்கள் வளர்ச்சி. 


ஒவ்வொரு கோவிலிலும் இறைவன்,  இறைவியர் பெயர்களும் தமிழில் 


இடம் பெறச் செய்யுங்கள். உங்களுக்கு  இறை நம்பிக்கை இருக்கிறதா 


இல்லையா என்பது முக்கியமல்ல. நாம்  வாழ்வது அந்தச் சமூகத்தில்தான். 


மேலும் தமிழ் வளர்ச்சிக்கும்  இது உதவும்.




”ஒன்றே குலம் ஒருவனே தேவன் “ என்று கடவுள் இல்லை என்று 


சொன்னவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளவில்லையா? எந்த ஒரு 


நிலையிலாவது அந்த வரிகளுக்குச் சொந்தக்காரரான திருமூலர் பெயரைச் 


சொன்னார்களா? இல்லையே ? ஏன்? திருக்கோவிலில் தக்கார்களாக 


இருப்பது மட்டும் என்ன நியாயம்? இங்கிருந்து தொடங்குங்கள். வெற்றி 


நிச்சயம். இன்னும் நிறைய இருக்கின்றன.


உங்கள் முயற்சி முழுமையாக வெற்றிபெற வாழ்த்துக்கள்!.


ஆசிரியர்,

தமிழர் எழுச்சி, எசு-9- மருத்துவர்கள் குடியிருப்பு,

பூ.சா.கோ. மருத்துவமனை வளாகம்,

பீளமேடு, கோயம்புத்தூர்-641 004

மின்னஞ்சல் :thamizharnadu@yahoo.com






0 comments:

Post a Comment

Kindly post a comment.