Wednesday, July 11, 2012

குழந்தையை மூத்திரம் குடிக்க வைத்தது தப்பில்லை - சுவாமி அக்னிவேஷின் உளறல்!


WEDNESDAY, JULY 11, 2012           

http://www.badriseshadri.in

நாட்டில் நடக்கும் எக்கச்சக்கமான பிரச்னைகளில் கடந்த சில நாள்களில் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மேற்கு வங்கத்தின் ஷாந்தி நிகேதனில் நடந்த ஒரு சம்பவம்.

ரபீந்திரநாத் தாகூர் உருவாக்கிய பள்ளி/கல்லூரி இது. ஜவாஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்தியைப் படிக்க அனுப்பிய பள்ளி இது.

படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டாள் என்பதால் பத்து வயதுச் சிறுமியை, அந்தச் சிறுநீரையே நக்கவைத்திருந்தார் அந்த ஹாஸ்டல் வார்டனான உமா போத்தார் என்பவர். விஷயம் பெரிதாகி, அந்த ஹாஸ்டல் வார்டன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் குழந்தையிடம், அந்தப் பள்ளிக்கூடத்துக்கு மீண்டும் செல்கிறாயா என்று கேட்டாலே அதிர்ச்சியில் உடல் நடுங்குகிறது என்கின்றன செய்திகள்.

இதற்கிடையில் மிகவும் கௌரவத்துடன் இந்தியா எங்கும் வலம் வரும் சுவாமி அக்னிவேஷ், தன் திருவாய் மலர்ந்தருளி, அந்த ஹாஸ்டல் வார்டன் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். [தி ஹிந்து செய்தி]

அதாவது, அந்த வார்டன் வாயில் சிறுநீரைப் புகட்டவில்லையாம். கழுத்தைப் பிடித்து அழுத்தி சிறுநீரைக் குடி என்று சொல்லவில்லையாம். வெறுமனே வாயால் சொன்னாராம். அந்தக் குழந்தையாக இதனைச் செய்ததாம். பெற்றோர்கள் இந்த விஷயத்தைப் பெரிதாக்குகிறார்களாம்.

இதைக் காலையில் படித்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் இதனை அக்னிவேஷ் defend செய்கிறார் என்று. பிறகு அடுத்த பத்திகள் புரியவைத்தன. அக்னிவேஷும் மொரார்ஜி தேசாய் போன்று தன் சிறுநீரைத் தானே அருந்துவாராம். அவருக்கும் படுக்கையை நனைக்கும் பழக்கம் இருந்து, தன் சிறுநீரைத் தானே அருந்துவதன்மூலம் குறைந்ததாம். எனவே இது நல்ல பழக்கம்தானாம்.

அக்னிவேஷும் மொரார்ஜி தேசாயும் என்ன வேண்டுமானாலும் செய்துகொண்டு போகட்டும். ஆனால் இங்கு நடந்தது என்ன? ஒரு குழந்தை மிரட்டப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, சிறுநீரை நக்கவைக்கப்பட்டுள்ளது. அதன் மருத்துவ குணங்கள் (உண்மையிலேயே அப்படி என்றால்!) இங்கு முக்கியமே அல்ல. அந்தக் குழந்தையின் மனம் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையிலேயே ஹாஸ்டல் வார்டன் அந்தக் குழந்தையின் நன்மை கருதி அதனைச் செய்தார் என்றால் முதலில் குழந்தையில் பெற்றோர்களிடமிருந்து அனுமதி பெற்றுச் செய்திருக்கவேண்டும். பெற்றோர்கள் அனுமதி தந்திருந்தாலும், இந்த யூரின் தெரப்பியை பிறருக்குத் தெரியாவண்ணம் ரகசியமாகச் செய்திருக்கவேண்டும். அப்படியெல்லாம் செய்யாமல், ஒரு குழந்தையைக் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கிலேயே இது செய்யப்பட்டிருக்கிறது என்பது குழந்தையின் சொற்களிலிருந்தே தெரியவருகிறது.

அண்ணா ஹஸாரே போராட்டம் சமயத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட அக்னிவேஷ், இப்போது மேலும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

MONDAY, JULY 

0 comments:

Post a Comment

Kindly post a comment.