Saturday, July 28, 2012

ஈரானிலிருந்து கப்பல் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு வர இந்தியா தடை!

http://tamil.oneindia.in/news/2012/07/28/india-india-bans-u-s-sanctioned-iranian-ships-158553.html

டெல்லி: ஈரானிலிருந்து இந்தியாவுக்குக் கப்பல் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று கூறி அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. இத்தடையைப் பின்பற்றுமாறு இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இதைத் தொடர்ந்து இந்தியாவும் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக் கொண்டு சவூதி அரேபியாவின்பக்கம் தலையைத் திருப்பியிருக்கிறது. இந்நிலையில் ஈரானிலிருந்து கப்பல் மூலம் கச்சா எண்ணெய் கொண்டுவர இந்தியா முழுவதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மேலாண்மை இயக்குநர் உபாத்யா, ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டபடி கச்சா எண்ணெயை எங்களால் இறக்குமதி செய்ய முடியவில்லை. ஜூலை மாதத்தில் 4 கப்பல்களில் எண்ணெயை இறக்குமதி செய்யவிருந்தோம். ஆனால், இதுவரை ஒரு கப்பலில் மட்டுமே எண்ணெய் வந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க் கப்பலுக்கான போக்குவரத்துச் செலவு, இன்சூரன்ஸ் ஆகியவற்றை இந்திய அரசு ரத்து செய்துவிட்டதே இதற்குக் காரணம் என்றார்.
இதனால் ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா முற்றாக நிறுத்திவிட்டதாகவே கூறப்படுகிறது.

மதிய உணவைச் சிறு பையில் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லும்


இவரது நிர்வாகத்தை எதிர்த்துத்தான் அமெரிக்கா பொருளாதாரத் தடை 


விதித்துள்ளது  உதவி:- குமுதம் ரிப்போர்டர்:





உலகத்தில் அதிசயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.. இந்தப் 

படத்தில் இருப்பவர் வட இந்தியாவில் இந்திப் படத்தில் நடித்துக் கோடி 

கோடியாக சேர்த்துக் குவிப்பவர் அல்லர். அதே நேரத்தில் கோடி 

கோடியாகச் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வந்தவரும் அல்லர். 

ஆனால், அரசியல்வாதிதான். இந்தியாவில் அல்ல. ஈரானில்!

ஈரான் அதிபர், அகம்மது நெஜாத்!

2005-ல் ஈரானின் அதிபரானவர்!

அதிபரானவுடன், அரண்மனைக்குச் சென்றார்.

சென்றவுடன் அரண்மனையில் இருந்த

விலை உயர்ந்த கம்பளங்களை எல்லாம்

மசூதிகளுக்கு அள்ளி வழங்கினார்.

இவரது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லையாம்.

தன் அரசில் அமைச்சர்களாகப் பதவி ஏற்றவர்களிடம்

செய்துகொண்ட ஒப்பந்தம்

எப்பொழுதும் ஏழையாகவே வாழ்வேன் என்பதுதான்.

கையெழுத்து வாங்கிக் கொள்கின்றார், அமைசர் ஆக்கியவுடன்!

தன்னுடைய வேலைக்குச் சம்பளமே

வாங்கிக் கொள்வதில்லை.

மற்றும் ஒரு அதிசயம்!

அதிபர் அகம்மது தினமும் வீட்டிலிருந்து 

உணவை சின்னப் பையில் எடுத்துச் செல்கின்றார்.

இவரல்லவோ மக்கள் தலைவர்.

இந்தத் தகவலைத் தந்தது

குமுதம் ரிப்போர்ட்டர் 22-07-2012

தொகுத்தவர் :நியூஸ் பர்கர்.



குமுதம் ரிபோர்டரில் வந்தது. . சம்ஹாரம் முடிந்தபின் ஒன்றுமே இல்லை என்று  அமெரிக்கா கைவிரிக்க, உலகம் ஆமாம் போடும். முதல் நடவடிக்கைதான் இந்தப்  பொருளாதாரத் தடை.!. 






0 comments:

Post a Comment

Kindly post a comment.