Saturday, July 14, 2012

ஹிட்லர் காரின் விலை 1.80 லட்சம் டாலர்!


 

1942 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதொரு மெர்சிடிஸ் கார், விலைக்கு வந்தது. 
]நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஒரு கார் டீலர், இந்தப் பழைய மெர்சிடிஸ் காரை பெரும் விலை கொடுத்து வாங்கினார். 

அவர் அதற்குக் கொடுத்த விலை 1.80 லட்சம் டாலர். அந்தக் கார் டீலரின் பெயர் பெட் டெபிஸ். அவர் அந்தக் காரை வாங்கும்பொழுது அதன் முக்கியத்துவம் அவருக்குத் தெரியாது. ஆனால், அந்தக் காரை வாங்கியபின்னரே, அது அடால்ப் ஹிட்லர்  தனது அத்தியாவசிய வேலைகளுக்குப் பயன்படுத்திய கார் என்பது தெரிய வந்தது.

 மெர்சிடிஸ் நிறுவனமும் இந்தக் கார் உண்மையிலேயே ஹிட்லர் பயன்படுத்தியதுதான் என்பதை உறுதிப்படுத்தியது. ஹிட்லர் பயன்படுத்திய காரைத் தான் வாங்கியது குறித்து அவர் ஆச்சரியமடைந்துள்ளார். 

இந்தக் காரைப் பத்திரமாகப் பயன்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.