Monday, March 12, 2012

உலகிலேயே உயரமான ரெயில் பாலம் இந்தியாவில்!



        வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்- சி.சுப்பிரமணிய பாரதியார்




சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள  பிரசிடென்சி கிளப்பில், 


11-03-2012  ஞாயிற்றுக் கிழமை பிற்பலில்ஒரு மணி முதல் ஐந்து மணிவரை 

வலைப்பூ பதிவர்கள் கூட்டம் நிகழ்ந்தது.


கூட்டத்தைக் கூட்டி நடத்தியவர் நண்பர் சசிதர் தொடர்பு எண் 9940662739

INDIBLOGGER.IN வலைப் பதிவாளர்களுக்கான கூட்டம்  அது. கூட்ட நிகழ்வுகள், 

எடுக்கப்பட்ட முடிவுகள், அமைப்பாளர் ஒப்புதலுக்குப்பின் விரிவாக இதே

வலைப்பூவில் விரிவாக இடம் பெறும்.

என்பெயருடைய ஓர்  உயர்ந்த உள்ளத்தைச் சந்திததன் எதிரொலிதான் இன்றைய இந்தப் பதிவு. 

அவரைப் போன்று  தினமும் அல்லாமல், அடிக்கடி சிறப்புத் தகவலுடன் கூடிய பட்த்தினை இடம் பெற்ச் செய்து வந்த நான், நினவூட்டி வற்புறுத்திட
பாசிட்டிவ் அந்தோணி முத்து  இல்லாததால் மறந்து போனேன்.

ஏனெனில், அவர் வலைப்பூக்களில் எழுதுவதில்லை. ஆனாலும் அவரும் ஒரு பதிவர்தான். என்ன புதிர் போடுகின்றேன் என்று என்ணுகின்றீர்களா ? ஆனால் சத்தியமான உண்மை இது. எழுதினால்தான் பதிவரா?  இல்லையே? அட்டகாசமான நிழற்படங்களை மட்டுமே இடம் பெற்ச் செய்து வருபவரும் பதிவர்தானே?

 பார்த்து ரசித்துப் பரவசப்படச் சென்றிடவேண்டும் :- dailyfotochennai.wordpress.com 
அதிலும் சில சூட்சமங்கள் உள்ளன. என் பெயரில் உள் சென்று பார்த்திடப் பதிவும் செய்து கடக்கும் வார்த்தையினையும் (  PASS WORD ) பெற்றுவிட்டேன்

இங்கு எடுத்த வேலையை முடித்த பின்னர் அங்கே செல்வேன், நண்பரின், கைவண்ணத்தையும், கலைஉணர்வையும் கண்டு ரசித்திட.

மேலே காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ள பாலம் உள்ள இடம் இந்தியா என்று தலைப்பிலேயே கொடுத்துவிட்டேன். ஏற்கனவே, தெர்ந்தவர்களுக்கு இது ஓர் பழைய செய்தி. என்போன்று தெரியாதவர்களுக்குப் புதிய செய்தி.

நமக்குத் தெரிந்தவை எல்லாம் பழசு. தெரியாதவை எல்லாம் புதுசு. இதுதான் என் ”பார்முலா” எப்பொழுதும்.!

UDHAMOUR-SRINAGAR-BARAMULLA - ரெயில்வே வழித்தடத்தில் அமைந்துள்ள பயணிக்க் இயலாத குக்கிராமங்களையும் இணைத்திடும்  திட்டமே இது!

63 கிலோ மீட்டர் தூரம் குகை வழிப் பாதயிலும், 7.5 கிலோ மீட்டர்தூரம் பாலத்தின் மீதும் ரெயில் செல்லும்.

ரெயில் பாலம் அமைக்கப்படும் உயரம்  359 மீட்டர்! அவ்வளவு உயரத்தில் வீசிடும் காற்றின்  அதிகமான வேகம் 266 KMBH 


KMAZ
KMB
KMBAX
KMBC
KMBD
KMBH-FM
KMBI
KMBI-FM
KMBL
KMBN-FM

இவற்றிற்கான பொருள்-அர்த்தம் சரியாகத் தெரிந்தவுடன் நிரவு செய்யப்படும். அல்லது தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம். காற்று வீசும் வேகத்தினைக் குறிப்பிடும் வார்த்தை- அளவீடு எனக் கொள்ளலாம்.

90 KMBH  அளவீட்டிற்கு மேல் காற்று வீசுமேயானால் பாலத்தின் மீது ரெயில் செல்லாது நிறுத்தப்பட்டு விடும். அதற்குரிய    நவீன முறையில் இயங்கும் வண்ணம் கைகாட்டிகள் ( SIGNAL SYSTEM )  அமைக்கப்படும் / பட்டுள்ளன .

அமைக்கப்படவுள்ள / அமைக்கப்பட்டுள்ள   பாலத்தின் நீளம் 1315 மீட்டர். இதற்குத் தேவையான இரும்பின் எடையளவு 25000 மில்லியன் டன் ????.


உலகத்தில் பிரான்சு தேசத்தில் ( பாரதியின் வார்த்தை ). டான் நதியின் மீது செல்லும் ரெயிலுக்காக அமக்கப்பட்டுள்ள தூண்களின் உயரம் 340 மீட்டர்.
இந்தியாவில் இமாசலப் பிரதேசப் பகுதியில் பாய்கின்ற ஷெனாப் ( CHANAB )
நதியின் மேல் செல்லக்கூடிய ரெயிலுக்காக அமைக்கப்படும் தூண்களின் உயரம் அதவிட 19 மீட்டர்கள் அதிகம், அதாவது, 359 மீட்டர்.

 


டெல்லியில் உள்ள குதுப்மினாரின்  5 மடங்கு உயரத்தை கொண்டது. 





பாரீஸ் நகரில் உள்ள EIFFEL TOWER -ஐ விட  35   மீட்டர்  உயரத்தில் உள்ளது.

  KATRA-DHARM   பகுதியில் 73  கிலோ  மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இந்தியாவில் 179 ரெயில்வேப் பாலங்களின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்த கொங்கண் ரெயிவே நிறுவனத்திடம்தான் இந்த அரிய உலக சாதனைப் பாலம் கட்டும் பணி கொடுக்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு 5005  கோடிதான்!

இமாசலப் பிரதேசங்களில் நிலவிடும் கடுமையான தட்ப வெப்ப நிலைகளுக்கு ஈடு கொடுக்கத்தக்க   தரமான வண்ணங்கள்தான் இரும்புத் தூண்களின் மீது பூசப்பட்டுள்ளதாக ரெயிவே நிர்வாகம் கூறுகின்றது. 35  ஆண்டுகளுக்கு  ஒரு முறை வண்ணம் பூசினால் போதுமாம்.

கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கென்றே  176 கிலோ மீட்டர் நீளமான சால அமைக்கும் வேலையையும் மேற்கொண்டதாகவும்  ரெயிவே நிர்வாகம் தெரிவித்துள்ளது..

கட்டுமானப் பணிகளின் போது GRP & RAILWAY PROTOTECTION FORCE  பாதுக்காப்புப் பணிகளை மேற்கொண்டனர். இருந்த போதிலும் இரு தடவைகள் பயஙரவாதிகளின்  தாக்குதல் நடந்திருக்கின்றது.


”சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
           சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் “

என்றான் செந்தமிழ்நாடு தந்த  தவப் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் !



இந்தியா  முழுமையும் சாலைகளையும், பாலங்களையும், ரெயில்வே பாதைகளையும் அமைத்திட்ட வெள்ளையர்கள், பாரதியார் மேற்கண்ட வரிகளைப் பாடிய காரணத்தால்தான் இலங்கையும் இந்தியாவையும் இணைக்கவில்லை போலும்!,

திருவள்ளுவரின் படம் கிடைக்கவில்லை கற்பனையில் உருவாக்கினோம். இது போன்றுதான் சைவ, வைணவத் திருமடங்கள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் கற்பனையில் உருவாக்கப்பட்ட படங்கள்தான். மகா கவி பாரதியின் படம்தான் இருக்கின்றதே எதற்ககாக  முறுக்கு மீசையும் முண்டாசும் கொண்ட கற்பனைப் பாரதியார்!ஏதோ கொஞச்ம் நெஞ்சம் இடறுகின்றதே ?

நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் படங்களை உள்ளது உள்ளபடியேதானே பயன் படுத்துகின்ற்றோம். பாரதிக்கு மட்டும் ஏன் இந்த விதி விலக்கு.?
வீட்டுக்கு வீடு பாரதி படத்தக் கொடுத்துப் பாரதியைப் பாதுகாக்கும்  பாரதி காவலர்கள் ஏன் மாத்தி யோசிக்கக் கூடாது?


உலகில் உள்ள எவருக்கும் இந்தியர்களும் எதிலும் இளைத்தவர்கள் அல்ல என்பதற்குக் கட்டியங் கூறும் அடையாளச் சின்னங்களுள் இந்தப் பாலமும் ஒன்று!731-railway bridge.png

0 comments:

Post a Comment

Kindly post a comment.