Wednesday, February 22, 2012

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு இந்தமுறையும் இந்தியா ஆதரவளிக்குமா ? அல்லது நடுநிலை வகிக்குமா ?


 



ஜெனீவாவில் சிறிலங்காவை ஆதரிக்கக் கூடாது; தே.மு.தி.க வும் கோரிக்கை news ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என தே.மு.தி.க கோரிக்கை விடுத்துள்ளது.

தே.மு.தி.க வின் பொதுக்குழுக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் இன்று சென்னையில் இடம்பெற்றது. இக் கூட்த்திலேயே மேற்படி விடயம் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தமிழ் மக்களை அழித்த மகிந்த ராஜபக்‌ஷ அரசிற்கு எதிராக சர்வதேசத்தினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும். என கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜெனீவாவில் சிறிலங்காவை ஆதரித்து தமிழினத்திற்கு துரோகம் இழைக்கக் கூடாது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.


ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இந்திய மத்திய அரசு தமிழினத்துக்கு துரோகம் செய்யக் கூடாது: வைகோ.
[Tuesday, 2012-02-21 10:45:15]
ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்று மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈழத் தமிழ் இனத்தை அழிக்கப் படுகொலைகள் நடத்திய இலங்கை அரசுக்கும், அதற்கு உடந்தையாகச் செயல்பட்ட காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும் வரலாற்றில் மன்னிப்பே கிடையாது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சில் பெப்ரவரி 27ம் திகதி கூட இருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக துரோகம் இழைத்து வரும் இந்திய அரசு நடைபெற்ற தமிழ் இனப் படுகொலையில் கூட்டுக் குற்றவாளியாகும் என்பது வரலாற்றில் மறைக்க முடியாத உண்மையாகும்.
2009-இல் இந்த மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய இந்திய அரசு, இப்பொழுது ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்திலும் அத்தகைய துரோகத்தைச் செய்யக் கூடாது என்று இந்திய அரசுக்கு எச்சரிக்கை செய்கிறேன் என்று செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்தார்.



 
ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக ஒன்றுகூடலிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஊடாக இந்திய மத்திய அரசின் ஆதரவைக் கோரியுள்ளது
ஒபாமாவுக்கான தமிழர் (Tamils for Obma) அமைப்பு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எழுதியுள்ள கடிதமொன்றில், ஜெனீவாவில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக ஒன்றுகூடலில் சிறிலங்காவிற்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்படுமிடத்து, அதற்கு இந்திய மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுள்ளனர்.

மேலும், இந்தியா தற்போது இந்த ஆணையக அங்கத்துவ நாடாக இல்லாது விட்டாலும், பிராந்திய வல்லரசு என்பதாலும். சிறிலங்கா இந்தப் பிராந்தியத்தில் இருப்பதாலும், இந்தப் பிரேரணையை ஆதரிப்பதால், இந்த ஆணையகத்திலுள்ள 47 நாட்டு தலைவர்களும் இந்தப் பிரேரணையை ஆதரிப்பார்கள்.

இந்தப் பிரேரணை வெற்றிபெறுமிடத்து, தமிழ் மக்களுக்கு இதன்மூலம் நீதி கிடைக்கும் என்றும், ராஜபக்ஸ போன்ற அரச தலைவர்கள் எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்களை செய்யத் தயங்குவர் என்றும் எழுதியுள்ளனர்.
இக்கடிதத்தை முழுமையாக வாசிக்க இங்கே அழுத்தவும்:

http://www.tamilsforobama.com/letters/Letter_to_Jayalaitha_requesting_India_help.html
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் நிறைவேற்றப்படவுள்ள சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு கோருகிறோம்
பெப்ரவரி 10, 2012
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மா அவர்கட்கு,
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு சார்பாக நாம் எழுதிக் கொள்வது,
இம்மாத இறுதியில் ஜெனீவாtவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் நடைபெறும் ஒன்றுகூடலில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்காவிற்கு எதிராக பிரேரணை வருமிடத்து, இந்தப் பிரேரணையை இந்திய மத்திய அரசு வெளியிலிருந்து ஆதரிப்பதுடன், ஆணையகத்திலுள்ள 47 நாட்டுத் தலைவர்களுக்கும் இந்த பிரேரணையை ஆதரிக்க வேண்டிய அவசியத்தை தெரிவித்து, அவர்களும் இந்தப் பிரேரணையை ஆதரிக்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும், இந்த பிரேரணை நிறைவேற்றப்படுமிடத்து, எமது தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்களை உலகறியச் செய்வதுடன், எமது தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வும் கிடைக்கும். அத்துடன் இந்த குற்றங்களை புரிந்தவர்கள் தண்டிக்கப்படவும் முடியும். மேலும் இதனால் மகிந்த ராஜபக்ஸ போன்ற உலக அரச தலைவர்கள் இவ்வாறு கொடுமைகளை செய்வதற்குத் தயங்குவர்.
இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்நாட்டு தமிழ் மக்கள் சார்பாக நீங்கள் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து, இந்திய அரசாங்கத்தை இந்த நீதியான தீர்மானத்திற்கு ஆதரவளிக்க கோருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வண்ணம்,
அன்புடன்,
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு (Tamils for Obama)
எதிரிநாடுகளோடு கைகுலுக்கும் இலங்கைக்கு
இந்தமுறையும் இந்தியா ஆதரவளிக்குமா ? அல்லது
உண்மையை உணர்ந்து நடுநிலை வகிக்குமா ?

0 comments:

Post a Comment

Kindly post a comment.