Thursday, January 19, 2012

நேனோ தொழில் நுட்பம்_-ஆயிஷா இரா.நடராசன்.

ஒரே குட்டி ஐபாட், ஆயிரம் பாடல்கள இசைத்து அசத்துகின்றது. ஒரு கைவிரல் பென் டிரவ் பல நூறு புத்தகங்களின் பக்கங்க்களை விழுங்க்கி எப்பொழுது வேண்டுமாயினும் அச்சாகி அதிர வைக்கிறது.

அனைத்திற்கும் காரணம் நேனோ தொழில் நுட்பம். முழுமையும் எடுத்துச் சொல்வது கடினம் அறிமுகமாக சிறு பகுதியை இங்கு காண்போம்.

முழுமையும் படித்தறிந்து பலன் பெறுவது இன்றைய இளைஞர்களின் கடமை.


நேனோ என்ற சொல்லின் பொருள் என்ன?

நேனோ என்பது கிரேக்க மொழிச் சொல். அத்ற்கு மிகச் சிறியது என்று பொருள்,

ஒரு நேனொ மீட்டர் என்பது எதைக் குறிக்கின்றது?

ஒரு நேனோ மீட்டர் என்பது 1000,000,000 =ஒரு மீட்டர் என் ஒரு நேனோ மீட்டர். சென்டி மீட்ட்ர் ஸ்கேல் போல இதற்கும் ஸ்கேல் உண்டு ஆனால் சாதாரண கண்ணிற்குப் புலப்படாது.

நேனோ தொழில் நுட்பம் என்றால் என்ன?

மிக அதிக எண்ணிக்கையிலான கருவிகளை அல்லது மூலக் கூறுகளை மிகச் சிறிய இடத்திற்குள் பொருத்தி வெவ்வேறுவிதமாக ஒன்றுக்கு ஒன்று தொடர்பு படுத்தி இயக்கு முறையே நேனோம் தொழில்நுட்பம். ஒரு கபேசி இன்று கேமரா முதல் எஃப்பெம் வானூலி வரை பல கருவிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

நேனோ அடிப்படையில் மீட்டரை எப்படிப் புரிந்து கொள்வது?

நேனோ மீட்டரை எப்படிப் புரிந்து கொள்வது? ஒரு மீட்டரில் 100 சென்டி மீட்டரும், 1000 மில்லி மீட்டஸ்ரும், 10000000 மைக்ரோ மீட்டர்க்,. 1000000000 நேனோ மீட்டரும் உள்ளன. இதைத் தாண்டி நேனொ சென்டி மீட்டரும் அதைவிட மிகமிகச் சிறிய நேனோ மில்லி மீட்டரும் உண்டு. நேனோ மைக்ரோவை நோக்கி உலகம் வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றது. மிக மிக நுண்ணிய அளவுகள் தமிழில் பண்டைய நாளில் பழக்கத்தில் இருந்தது ஆய்வுக்குட்படுத்தத் தக்கது,

நேனோ நமது பார்வைக்குப் புலப்படாதா?

நேனொவை மேலும் புரிந்துகொள்ள ஒரு முற்றுப் புள்ளியில் 5 மில்லியன்
கார்பன் அணுக்களை அடக்கலாம்.ஒரு நேனொ மீட்டரில் 10 கார்பன் அணுக்கள் அடங்கும், இதைப் பார்த்திட விசேட நுண்னோக்கிகள் தேவை.

நேனொ தொழில் நுட்பம் இந்தியாவுக்குப் புதிதா?

கைவினை வித்தகர்கள் நமது நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே, அது என்ன என்று பெயரிடாமலேயே திப்பு சுல்தான் வாள், கார்பன் அடுப்பு, அஜந்தா ஓவியம் என அசத்தியிருக்கிறார்கள். திப்பு சுல்தான் வாள் கார்பன் நேனொ துகள்கள்களால் ஆனது. பொற் கொல்லர்கள் தங்க நேனோ இழைகளால் மன்னர்களுக்குக் கொடிக் கயிறு கூட இழைத்துத் தந்திருக்கின்றார்கள்.

நேனோ தொழில் நுட்பவியலின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?

ரிச்சேடு ஃப்யின்மென்.இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.நேனொ தொழில் நுட்பத்தின் ஆரம்ப நிலையிலேயே அப்படி ஒன்று உலகில் சாத்தியம் என உலகிற்கே புரிய வைத்தவர் இவர்.

நேனொவின் எதிர்காலம் அனேகமாக மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்க்களிலும் நேனோவாகவே இருக்கும்.

ஒரு குண்டூசி முனைக்குள் முழு பிரிட்டானியா கலைக் களஞ்சியத்தையே அடக்கியது ஒரு தொடக்கமே. முழு உலகையே ஒரு முற்றுப் புள்ளிக்குள் கொண்டுவரத் துடிக்கும் நேனோ தொழில் நுட்பம் குறித்த 100 க்கு 100 தகவல்கள் அடங்கிய நூல் 100பக்கங்க்களில் இருபத்தந்தே ரூபாயில் கிடைத்தது என் அதிர்ஷ்டம்.

இன்றைய இளைஞர்கள் நேனொ பக்கம் கடைக்கண் பார்வை வைத்திடல் வேண்டும்.

வாய்ப்பும் வசதியும் இருந்தும் உரிய காலத்தில் கணிப்பொறிகாலத்தில் அவற்றின்பால் உரிய கவனம் வைக்காதவர்கள் இன்று படும் அல்லல்களை அனுபவிக்காமல் இருக்க வேண்டும் என்றால் நேனோ பக்கம் முழுக்கவனத்தையும் செலுத்துங்க்கள்.

அறிமுக நூல்:

100 க்கு 100 அறிவியல் நேனோ தொழில்நுட்பம்

இரா.நடராசன்

421,அண்ணா சாலை, தேனாம் பேட்டை, சென்னை-600 018

பாரதி புத்தகலாயம்-24332424, 24332924

பாரதி புத்தகாலயத்திற்கு மனமார்ந்த நன்றி.

1 comments:

  1. அருமையான பதிவு வாழ்த்துகள்.

    ReplyDelete

Kindly post a comment.