Friday, September 2, 2011

வம்சம் வெளங்குமா, வெளங்காதான்னு பாத்துருவோம்!

கட்டுரை  எழுதியவர்  இரா.உமா, சமூக ஆர்வலர்  மற்றும் பெண்ணியவாதி
மாதமிருமுறை வெளிவரும் கருஞ்சட்டைத்  தமிழன் சிற்றிதழில் பணியாற்றுகின்றார். கீற்று.டாட்.காம்  சென்று  சிற்றிதழ்களைப்  படிக்கலாம். .

கிராமத்துல, வீட்டுல இருக்கிற புள்ளைங்ககிட்ட, ' கண்ணுகளா, அந்த வீட்டுக்குள்ள மட்டும் போயிராதீங்க. அதுக்குள்ள முனி இருக்கு. உங்கள மாதிரி சின்னப்புள்ளைங்க போனா முனி அடிச்சித் தின்னுரும் 'னு சொல்லிப் பயமுறுத்தி வச்சிருப்பாங்க. ஏன்னா, கடலை, தட்டப்பயிறு, பச்சப்பயிறு, அரிசி, கருப்பட்டிச் சிப்பம்னு வெள்ளாமைல வந்ததெல்லாத்தையும் அந்த வீட்டுலதான் போட்டு வச்சிருப்பாங்க. அத சின்னப்புள்ளைங்க போக வர எடுத்துத் தின்னுறக்கூடாதேங்கறதுக்காக அந்த வீட்டுல முனி இருக்குன்னு புளுகிவைக்கிறதுண்டு. அதுக்கேத்தமாதிரி, அவ்வளவா ஆள் நடமாட்டமே இல்லாத, எப்பவுமே வெளிச்சம் கொறவாவே இருக்கிற அந்த வீட்டுப்பக்கம் திரும்பிக்கூடப் பாக்காதுங்க புள்ளைங்க.
padmanapa_temple_360 
அப்படி ஒரு கூத்துதான் இப்ப திருவனந்தபுரம் கோயில்லயும் நடக்குது. காஞ்சிபோன தர்ப்பயக் கூட விட்டுத்தராத அக்கிரகாரக் குடுமிங்க, கோடிக்கணக்கான சொத்துக்களப் பாத்துட்டு இன்னும் ஆடாம இருக்கேன்னு நௌச்ச நௌப்பு மறையல, ஆட்டத்தத் தொடங்கிட்டாங்க பாத்தீங்களா ! அது சரி, கிருமிய அழிக்கறதுக்காகத்தான், பகவான் கடல பொங்க வச்சார்னு கத சொல்ற தசாவதாரங்கள், இதுமாதிரி கத சொல்றத விட்டுட்டா லோகமே அழிஞ்சிடாதோ. அவாளோட கதாகாலட்சேபத்தைக் கேட்டே கட்டெறும்பாப் போனவங்கதான நம்மாளுங்க. புதுக்கத என்னன்னு கேப்பமே...

திருவனந்தபுரம் கோயில்ல, 5 அறயத் தொறந்து பாத்ததுல, அதுக்குள்ள கொட்டிக்கிடந்த தங்கத்தையும், வைரங்களையும் பாத்துட்டுப் பொளந்த வாய இன்னும் இந்த ஒலகம் மூடல. இப்ப  அடுத்து தொறக்க வேண்டியது 6வத அற மட்டும்தான். அதயும் தொறந்து பாத்துட்டா, பத்மநாபர் மாடா ஒழச்சு சம்பாதிச்ச சொத்தோட மொத்த மதிப்பையும் தெரிஞ்சிக்கலாம். இதுவரைக்கும் சும்மா இருந்தவா, கடைசி அறயத் தொறக்கப்போறப்போ, சாமி கண்ணக் குத்தீரும்னு பூச்சாண்டி காட்றாளே எதுக்கு? ஒரு வேள, 5 அறயில இருந்த புதையலோட மொத்த மதிப்பவிடப் பலமடங்கு கூடுதலான சமாச்சாரங்கள் கடைசி அறயில இருக்குமோன்னுட்டு ஒரு சந்தேகம் கிளம்பற தோல்லியோ? 

அந்த அறயத் தொறக்கிறதுல அப்படி என்ன சிக்கல்? அந்த அறயோட கதவுல, பாம்புப் படம் இருக்கு, தொறந்தா கேடு வந்துரும்னு சோசியருங்க பயமுறுத்தினதால, எதுக்கு வம்பு, பங்காளி டு பங்காளி, நாட்டாம டு நாட்டமன்னு, நேரடியா கடவுள்கிட்டயே கேட்க முடிவுபண்ணி, தேவ பிரசன்னம் பாத்தாங்க. தேவ பிரசன்னம்னா என்னமோ ஏதோன்னு நௌச்சிர வேணா, நம்ம ஊருல குறி கேப்பாங்கல்ல, அதுமாதிரி அங்க சோழிய உருட்டிப் போட்டு குறி கேக்குறது அவ்வளவுதான். இப்படித்தான் விளங்காத மாதிரி எதாச்சும் சொல்லி நம்மள மெரட்டுறதே அவிங்களுக்கு பொழப்பாப்போச்சி. சரி, தேவ பிரசன்னம் பாத்தாங்களா, அப்படிப் பாத்ததுல சில பல அதிர்ச்சியான சமாச்சாரங்கள கடவுள் பட்டியல் போட்டுக் காட்டியிருக்காராமா.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஜெயமாலான்னு ஒரு அம்மா சபரிமல அய்யப்பன தொட்டுட்டாரு, அதனால கோயிலோட புனிதம் கெட்டுப்போச்சின்னு சொல்லி தேவ பிரசன்னம் பாத்தாங்க. பணிக்கரும், ஜெயமாலாவும் கூட்டுச் சதி பண்றாங்கன்னு, தந்திரியும், தந்திரி குளிக்காமயே பூச செய்றாருன்னு பணிக்கரும், மாத்தி மாத்தி உண்மையப் போட்டு ஒடைக்க, கடைசில அந்த வெவகாரம் வெளங்காமயே போயிருச்சி. 

இப்ப இது. கோயில் சொத்த இடம்மாத்தி வச்சதுனால, நாட்டுக்கே பெரிய ஆபத்து வரலாம்னும், கேரள அரசியலுக்கு மட்டுமில்லாம தேசிய அரசியலுக்கே நேரஞ் சரியில்லாமப் போக வாய்ப்பிருக்குன்னும் பிரசன்னத்துல கடவுள் சொல்லியிருக்காராம் (கேரளாவோட சேத்து ஒட்டுமொத்த தேசத்துக்கே எப்படி வாய்ப்பூட்டுப் போட்டோம் பாத்தேளா) என்னடா எழவு இது, கடவுள் அரசியல் எல்லாம் பேசுராறான்னு தத்து பித்துன்னு கேட்கப்படாது. அவா நௌச்சா அரங்கன் அரசியல் பேசறதென்ன, அரசியல்ல தொபுக்கடீர்னு குதிக்கக்கூடச் செய்வாரு.

அப்புறம்... பத்மநாபர் கோயில் மூலவர் மகிழ்ச்சியா இல்லைன்னும் பிரசன்னம் சொல்லுதாம். (பின்னே இத்தன காலமா பதுக்கி வச்சதெல்லாத்தையும், இப்படி பிதுக்கி பிதுக்கி வெளிய எடுத்தா...) அதனால,  கெடச்ச புதையல மதிப்பிடக்கூடாது, படம் புடிக்கக் கூடாது, இதப்பத்தி வெளியில சொல்லக்கூடாது ‡ இப்புடி பல கூடாதுகளை சோழிய உருட்டுன சோசியருங்க சொல்றாங்க. அப்பத்தான உறிஞ்சித் திங்க வசதியாயிருக்கும்.
நாட்டுக்கு ஏதாவது ஆபத்துன்னா, அத தனக்கு வந்தா மாதிரி நௌச்சி பதறுறது நம்ம மரபு. தனக்கு ஏதாவது ஆபத்து வருதுன்னா, நாட்டுக்கே ஆபத்துன்னு அலறுறது பார்ப்பன புத்தி. கோயில் கருவறையில, கல்லுக்குப் பக்கத்துல, கல்லு மாதிரி அசைக்க முடியாம குந்திகிட்டு, அழிம்பு பண்றது வேற எதுக்கு. நோகாம நொங்கு திங்கத்தான்.

கடவுள் பேரச்சொல்லி பயமுறுத்தி, அவ்வளவு பெரிய செல்வத்த மறுபடியும் மண்ணுக்குள்ள புதைக்கத்தான் சோழி உருட்டலும், கதவத் தொறக்கிவறங்க வம்சமே விளங்காமப் போயிரும்கற மிரட்டலும். பக்தர்களுக்குப் பயமா இருந்தா ஒதுங்கி நின்னு வேடிக்கை பாருங்க, நாங்க அந்தக் கதவத் தொறக்குறோம்னு  கருஞ்சட்டைத் தோழர்கள் முன்வந்தா... என்ன ஓய் ஒத்துக்கறேளா?
Bookmark and Share

2 comments:

  1. Replies
    1. appa eanna maithukku pappanda yosana kekkanum veanna

      Delete

Kindly post a comment.