Tuesday, September 27, 2011

முதல் நோபல் பரிசு பெற்ற ஆப்பிரிக்கப் பெண்மணி மரணம்


Born 1 April 1940
Ihithe village, Tetu division, Nyeri District, Kenya
Died 25 September 2011 (aged 71)
Nairobi, Kenya
Education B.S. Biology,
M.S. Biological Sciences,
Ph.D. Veterinary Anatomy
Occupation Environmentalist, Political activist
Ethnicity Kikuyu

1977ல் க்ரீன் பெல்ட் இயக்கத்தை நிறுவினார். அதன் மூலம் மரக்கன்று நடும் பணியினைச் செய்து வந்தார். கென்யா முழுவதும் அவரது இயக்கம் இன்றளவும் ஐந்து கோடி மரக்கன்றுகளை நட்டுச்சாதன புரிந்துள்ளது.

கென்யாவில் உயர்ந்த கட்டிடங்கள் கட்டப்படும்பொழுதெல்லாம் வாங்கரி மாத்தாய் அதனைத் தடுத்துள்ளார். அவ்வாறு தடுக்கும் பொழுதெல்லாம் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கின்றார்.

சுற்றுச் சூழல் அவசியத்தை வலியுறுத்தியதுடன், உலக அமைதியையும் வாழ்நாள் முழுவதும் வற்புறுத்தி வந்துள்ளார்.

2004ல் உலக அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பரிசினைப் பெறும் முதல் ஆப்பிரிக்கப் பெண்மணி இவரே ஆவார்.

2002ல் கென்யாப் பாராளும்ன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003முதல் 2005வரைசுற்றுச் சூழல் துணை அமைச்சராகவும் பதவி வகித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த ஞாயிறன்று மரணத்தைத் தழுவினார். அப்போது அவருக்கு வயது71.

0 comments:

Post a Comment

Kindly post a comment.