Thursday, September 15, 2011

30 ஆயிரம் பணியாளர்களை வெளியேற்றுகிறது பேங்‌க் ஆப் அமெரிக்கா

கடும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவிற்கு மற்றொரு நெருக்கடியாக வந்துள்ளது பணியாளர்கள் பணி நீக்க உத்தரவு. அமெரிக்காவில் இயங்கி வரும் பேங்க் ஆப் ‌அமெரிக்கா தன்னுடைய பணியாளர்களின் எண்ணிக்கையை அடுத்துவரும் ஆண்டுகளில் குறைக்க உள்ளது.

இதன்படி பணி நீக்கம் செய்யப்பட உள்ள பணியாளர்களின் எண்ணிக்‌கை 30 ஆயிரமாகும். தற்போது இவ்வங்கியில் ௨௮௮ ஆயிரம் பேர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர்.

பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 5 பில்லியன் டாலர் அளவிற்குச் செலவுகளைக் குறைக்க முடியும் என வங்கியி்ன் தலைமை அதிகாரி பிரையன் ‌மோய்னிஹான் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.